நட்சத்திர பலன்கள்.. நவம்பர் 12ம் தேதிக்கான பலன்கள் உங்களுக்கு எப்படி இருக்கும்?.. வாங்க பார்க்கலாம்!
Natchathira Palangal: மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இன்றைய தினமான 2024 நவம்பர் 12-ஆம் தேதிக்கான ஜென்ம நட்சத்திர பலன்கள் குறித்து இங்கு காண்போம்.
Janma Natchathira Palangal: ஒருவருடைய ராசிக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் எப்படி அவசியமோ அதேபோல அந்தந்த் நட்சத்திரங்களைக் கொண்ட ராசிக்காரர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் மிகவும் அவசியமாகும். அந்த வகையில் எந்தெந்த நட்சத்திரங்களுக்கு என்னென்ன பலன்கள் என்பது குறித்து இங்கே காணலாம்.
அஸ்வினி நட்சத்திரம்
நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் உங்களை தேடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பரணி நட்சத்திரம்
குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை நட்சத்திரம்
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்குதாரர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
ரோகிணி நட்சத்திரம்
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு வெளிநாடு பயணம் ஏற்படக்கூடும்.
மிருகசீரிஷம் நட்சத்திரம்
சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். சொத்துக்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும்.
திருவாதிரை நட்சத்திரம்
பொன், பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிதாக நகைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
புனர்பூசம் நட்சத்திரம்
வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தால் உங்களுக்கு பண வரவு மிகவும் அதிகமாக இருக்கும்.
பூசம் நட்சத்திரம்
நண்பர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய நண்பர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். குடும்ப சிக்கல்களில் ஈடுபட்டு நண்பர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்தி கொடுப்பார்கள்.
ஆயில்யம் நட்சத்திரம்
நிலம் சம்பந்தப்பட்ட முதலீடுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். விவசாயத்திலிருந்து உங்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும்.
மகம் நட்சத்திரம்
சமூக முன்னேற்றத்திற்கான செயல்கள் உங்களிடம் அதிகம் இருக்கும். மக்களுக்காக பணியில் ஈடுபட்டு பல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
பூரம் நட்சத்திரம்
குடும்பத்தோடு உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினரால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தோடு சேர்ந்து ஆன்மீகப் பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.
உத்திரம் நட்சத்திரம்
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்களை பெற்றுத் தரும்.
அஸ்தம் நட்சத்திரம்
புதிய கூட்டணி மூலம் சேர்ந்த முதலீடுகளில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இணையதள வேலைகள் செய்பவர்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும்.
சித்திரை நட்சத்திரம்
குடும்பத்தோடு கூடியிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுவரை குடும்பத்தினரோடு சேராமல் பிரிந்து இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்பினால் கூட்டுக் குடும்பம் உருவாகக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
சுவாதி நட்சத்திரம்
வெளியூர் பயணங்களால் உங்களுக்கு மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படக்கூடும். பயணங்களால் உங்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டு மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
விசாகம் நட்சத்திரம்
மற்றவர்களை நம்பாமல் இருப்பது நல்லது. எதையும் நம்பாமல் களத்தில் இறங்கினால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். எந்த காரியத்திலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது.
அனுஷம் நட்சத்திரம்
வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களுக்கு செலவுகள் ஏற்படும். ஆனால் சுப செலவுகளாக இருக்கக்கூடும்.
கேட்டை நட்சத்திரம்
எதிர்பார்த்த விஷயங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். பணம் உங்கள் கைகள் வந்து சேரும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். முதலீடுகளுக்கு ஏற்ற பணங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
மூலம் நட்சத்திரம்
வியாபாரத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களில் ஏற்பட்டாலும் அதிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
பூராடம் நட்சத்திரம்
அரசாங்க சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் அதிலிருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள். மாணவர்கள் அரசு தேர்வுகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பார்கள்.
உத்திராடம் நட்சத்திரம்
நண்பர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பல நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்ய தேடி வருவார்கள். அதே போல நண்பர்களால் நீங்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.
திருவோண நட்சத்திரம்
குடும்பத்தில் மகிழ்ச்சி உங்களால் நிறைய கூடும். குடும்ப நன்மைக்காக நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் உங்களுக்கு கட்டாயம் முன்னேற்றம் இருக்கும்.
அவிட்டம் நட்சத்திரம்
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உங்களுடைய வேலை செய்யும் திறனாய் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். நீங்கள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருப்பீர்கள்.
சதயம் நட்சத்திரம்
எடுத்த வேலை முடிப்பதற்கு சற்று தாமதமாகும். ஆனால் கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நீண்ட நேரம் வேலை செய்யக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும்.
பூரட்டாதி நட்சத்திரம்
தொழிலுக்கு உங்களால் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். பல்வேறு விதமான இடையூறுகள் உங்களைத் தேடி வந்தாலும் அதில் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரம்
சிறப்பாக வேலை செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். இதனால் உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். தக்க சன்மானமும் உங்களைத் தேடி வரும்.
ரேவதி நட்சத்திரம்
தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாக தேடி வரும் தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது இல்லையென்றால் உங்களுக்கு சிக்கல் கவி ஏற்படக்கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.