Tamil News  /  Astrology  /  Here We Will See The Horoscope For November 24
ராசிபலன்
ராசிபலன்

Today Rasi Palan: இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை தேவை!

24 November 2022, 6:37 ISTSuriyakumar Jayabalan
24 November 2022, 6:37 IST

நவம்பர் 24ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

ட்ரெண்டிங் செய்திகள்

கடன் சிக்கல்கள் தீரும், சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் வெற்றிகளைத் தரும். உங்களால் மற்றவர்களுக்கு உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம்

ரிஷப ராசி

உங்களைத் தேடி மகிழ்ச்சி வந்து கொண்டிருக்கிறது. குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உங்கள் முதலீடு இரட்டிப்பாகத் திரும்பக் கிடைக்கும். பொறுமையாக இருப்பது நல்லது.

மிதுன ராசி

பண மழையில் நனையப் போகிறீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். வேலை செய்யும் இடத்தில் சிரமம் இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.

கடக ராசி

உடன்பிறந்தவர்களால் நல்ல செய்தி வரும், புதிய நகைகள் வாங்க வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும், உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும், வியாபாரத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது

சிம்ம ராசி

உறவினர்களால் பிரச்சனை உங்களைத் தேடி வரும், எதிர்பாராத வழியில் வந்த பணம், எதிர்பாராத செலவுகளால் திரும்பச் செல்லும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும், சுற்றி இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது, அதனால் மனம் தளர வேண்டாம்.

கன்னி ராசி

பணவரவு யோகம் உள்ளது, எடுத்த காரியங்கள் தாமதமானாலும் முடித்து விடுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் எதிர்பார்த்த உதவி கட்டாயம் கிடைக்கும், உறவினர்களால் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்தபடி வியாபாரப் பயணம் செல்லும், அதன் மூலம் லாபம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். பணம் கையிருப்பு குறையும். வேலை செய்யும் இடத்தில் மனஉளைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிக ராசி

மற்றவர்கள் பேச்சை நம்ப வேண்டாம். எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக நடக்கும். உங்களைத் தேடி நல்ல செய்தி வரும். உடன்பிறந்தவர்களால் நன்மை கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

தனுசு ராசி

மற்றவர் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். தேவையில்லாத சிக்கல்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்கள் உடைமைகளை மீது கவனம் தேவை.

மகர ராசி

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலக பணியில் இருப்பவர்கள் கடுமையாக உழைப்பீர்கள்.

கும்ப ராசி

நினைத்த காரியம் வெற்றியில் முடியும். புதிய வீடு, மனை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மீன ராசி

வியாபாரம் சற்று மந்தமாக இருந்தாலும் வரும் காலங்களில் நல்ல முன்னேற்றம் அடையும். செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

டாபிக்ஸ்