Today Rasi Palan: மே 26 - பொறுமையாக இருப்பது நல்லது..!
மே 26ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
வேலை செய்யும் இடத்திலிருந்த சிக்கல்கள் தீரும். தடைப்பட்ட காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. தைரியம் அதிகமாகும்.
ரிஷப ராசி
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் நன்மை கிடைக்கும். உங்கள் திறமையால் முன்னேற்றம் அதிகமாகும். வியாபாரத்திலிருந்த சிக்கல்கள் தீரும். பொறுமையாக இருப்பது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும்.
மிதுன ராசி
தேவையில்லாத உத்தரவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆராயாமல் மற்றவர்கள் கூறுவதைக் கேட்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப விஷயத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. கூடுமானவரையில் மற்றவர்களிடம் அன்பாகப் பழகுங்கள். கடன் வாங்கும் சூழல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
கடக ராசி
வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. ரியல் எஸ்டேட் தொழிலில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவமனை செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிம்ம ராசி
சொத்துக்களிலிருந்த சிக்கல்கள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் ஏற்படும். உடல் நலம் ஆரோக்கியம் பெறும். உயர் அலுவலர்களிடம் பாராட்டு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
கன்னி ராசி
எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு தாமதமாகும். பிள்ளைகளால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களிடம் சிக்கல்கள் ஏற்படும். பயணங்களால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் அலட்சியம் வேண்டாம். கவனமாக இருப்பது நல்லது.
துலாம் ராசி
பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும். தொழில் சார்ந்த விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படும். பணப்பரிவர்த்தனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் லாபம் கிடைக்கும். தேவையில்லாத செலவுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி
பணவரவு தாமதமாகும், புதிதாகத் தொழில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. பேச்சுத் திறமையால் வெற்றிகள் கிடைக்கும். நீங்கள் நினைத்தவை நடக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தனுசு ராசி
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களிடம் பொறுமையாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகர ராசி
பணப் பரிவர்த்தனைகள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து விடுங்கள். கையெழுத்துப் போடும் போது கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
கும்ப ராசி
வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். எதிர்பாராத நேரத்தில் வியாபாரம் குறித்து நல்ல செய்தி வரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். தேவையில்லாமல் வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மீன ராசி
முழுமூச்சாய் செயல்பட்டு நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். சொத்து சிக்கல்கள் தீரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். புதிய முதலீடுகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.