தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Horoscope For May 22

Today Rasi Palan: மே 22 - கடுமையாக உழைக்க வேண்டும்..!

Suriyakumar Jayabalan HT Tamil
May 22, 2023 05:30 AM IST

மே 22ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ராசிபலன்
ராசிபலன்

ட்ரெண்டிங் செய்திகள்

செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். குழந்தைகளுக்காக மருத்துவச் செலவு செய்ய அதிக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை கிடைக்கும். வேலை செய்யுமிடத்தில் பாராட்டுகள் குவியும்.

ரிஷப ராசி

மற்றவர்கள் தீமைகள் செய்தாலும் நீங்கள் நன்மை செய்வீர்கள். உங்கள் அருமையை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள். வியாபாரத்தில் சிக்கல்கள் அதிகரிக்கும், தொழிலில் மந்தம் ஏற்படும். நம்பிக்கைக்குரியவர்களால் ஏமாற்றப் படுவீர்கள். பல நாள் கேள்விக்கு இன்று விடை கிடைக்கும்.

மிதுன ராசி

தடுக்கி விழும் நேரத்தில் உங்கள் மனைவி காப்பாற்றுவார். தேவையான நேரத்தில் உங்கள் சேமிப்பு பணம் உதவும். சொத்து வில்லங்கங்கள் நீங்கும். உதவிகள் உங்களைத் தேடி வரும். சிறு வியாபாரிகளுக்கு முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடக ராசி

படுத்துக் கிடந்த தொழிலைத் தூக்கி நிறுத்துவீர்கள். தேவையான நேரத்தில் பண உதவி கிடைக்கும், உங்கள் வியாபாரம் விருத்தியாகும். அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்குச் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். மனவேதனை நீங்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

சிம்ம ராசி

குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மன உளைச்சல் ஏற்படும். பிள்ளைகளைப் பெற்றோர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும். நேர்மையாக இருப்பது நல்லது. பணப்பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருங்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களிலிருந்த சிக்கல்கள் தீரும்.

கன்னி ராசி

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். அலுவலகத்தில் மற்றவர்கள் பேச்சைக் கேட்பது நல்லது.

துலாம் ராசி

உடன் இருப்பவர்கள் உங்களுக்குப் போட்டியாக மாறுவார்கள். மற்றவர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள். முன்னேற்றம் அடையக் கடுமையாக உழைக்க வேண்டும். வியாபாரத்தில் மன உளைச்சல் அதிகமாகும். செலவுகள் உங்களைக் கஷ்டப்படுத்தும். ஆனால் காரியங்கள் வெற்றியாக முடியும்.

விருச்சிக ராசி

பணவரவு அதிகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியில் முடியும். புதிதாக இடம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மனநிம்மதி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி

குடும்பத்திற்காக அதிகம் உழைப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு ஏற்படும். பரம்பரைச் சொத்தை பிரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வார்த்தைகளில் கவனம் தேவை இல்லையென்றால் சிக்கல்களில் மாட்டிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் சிக்கல்கள் ஏற்படும்.

மகர ராசி

குடும்பத்திற்காக சில காரியங்களைச் செய்வீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் லாபம் அதிகமாகும். கடின உழைப்பால் வெற்றி கிடைக்கும். நகைகள், வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பணவரவு அதிகரிக்கும்.

கும்ப ராசி

உடல் நலத்தில் கவனம் தேவை, அனைவரிடத்திலும் அன்பாகப் பேசுங்கள். வியாபாரம் மந்தமாக இருக்கும். பணவரவில் சிக்கல்கள் ஏற்படும். பணி செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கவனமாக இருப்பது நல்லது.

மீன ராசி

மற்றவர்களின் பேச்சைக் கேட்பதைத் தவிர்த்து விடுங்கள். பணப்பரிவர்த்தனையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடன் சிக்கல்களால் அவமானம் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்