Today Rasi Palan: மே 10 - நேர்மையாக இருப்பது நல்லது..!
மே 10ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி
வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வருமானம் அதிகரிக்கும். நேர்மையாக இருப்பது நல்லது. மனக் கவலையைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷப ராசி
உறவினர்களிடம் இருந்த சிக்கல்கள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பயணங்கள் நல்ல பலன்களைத் தராது. பொறுமையாக இருப்பது நல்லது. தேவையில்லாத கவலைகளைத் தவிர்ப்பது நல்லது.
மிதுன ராசி
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறையும். அலைச்சல் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கடக ராசி
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் சிக்கல்கள் ஏற்படும். கையெழுத்துப் போடும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வெளியே செல்வது மிகவும் நல்லது.
சிம்ம ராசி
தேவையில்லாமல் மற்றவர் விஷயத்தில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். பணப்பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன் பணியாற்றுபவர்கள் இடம் கவனம் தேவை. வியாபாரத்தில் மூன்றாவது ஒருவரைத் தலையிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மற்றவர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.
கன்னி ராசி
விட்டு திருமண காரியங்கள் நிகழ உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலைகளிலிருந்து சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்த சிக்கல்கள் தீரும்.
துலாம் ராசி
தொழில் சற்று மந்தமாக இருக்கும். தேவையில்லாமல் எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். எதிர்பாராத நேரத்தில் அன்பானவர்கள் எதிரியாக மாறுவார்கள். விவசாயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உதவிகள் வருவதற்குத் தாமதமாகும்.
விருச்சிக ராசி
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் பெற்றோர்களுக்குப் பெருமை கிடைக்கும். சொத்து சிக்கல்கள் தீரும். ரியல் எஸ்டேட் தொழிலில் அமோக வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும்.
தனுசு ராசி
தொழில் சார்ந்த எதிரிகள் அதிகமாவார்கள், அதனை எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து உதவி கிடைக்கும். வியாபாரம் விரிவடையும், விவசாயம் சற்று மந்தமாக இருக்கும்.
மகர ராசி
வார்த்தைகளில் கவனம் தேவை இல்லை என்றால் பிரச்சினை ஏற்படும். கடனை திருப்பி கேட்கும் போது பிரச்சனை வர வாய்ப்புள்ளது. மனைவியின் பேச்சைக் கேளுங்கள், கையெழுத்துப் போடும் போது எச்சரிக்கையாக இருங்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் சிரமம் ஏற்படும். பணப் பிரச்சனை உண்டாகும்.
கும்ப ராசி
வெளியூர் பயணம் பலனைத் தராது, நிறம் சம்பந்தப்பட்ட தொழில் சற்று மந்தமாக இருக்கும். கேட்பவர்களுக்கு உதவி செய்வீர்கள், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து விட்டு வீட்டில் சாப்பிடுங்கள். திருமண வாய்ப்பு அதிகமாக உள்ளது. பிள்ளைகளால் செலவு உண்டாகும்.
மீன ராசி
வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பாராட்டுகள் குவியும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். உங்களுக்கு ஏற்றார்போல் குடும்பத்தினர் நடந்து கொள்வார்கள். நண்பர்களால் மன அமைதி ஏற்படும். சிக்கலான நேரங்களில் சரியான உதவி கிடைக்கும்.

டாபிக்ஸ்