தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan : மார்ச் 18- யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம்.. கவனமா இருங்க!

Today Rasi Palan : மார்ச் 18- யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம்.. கவனமா இருங்க!

Divya Sekar HT Tamil
Mar 18, 2023 06:36 AM IST

மார்ச் 18ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ராசிபலன்கள்
ராசிபலன்கள்

மதிப்பும், மரியாதையும் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

ரிஷப ராசி

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

மிதுன ராசி

எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்களால் தொல்லை உண்டு. உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக குழப்பங்கள் தோன்றி மறையும்.

கடக ராசி

பெற்றோருடன் சின்ன கருத்து மோதல்கள் வரும். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சிம்ம ராசி

குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். திருமண காரியம் கைகூடும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடம், பூமியால் பிரச்சினைகள் ஏற்படும்.

கன்னி ராசி

உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

துலாம் ராசி

பிரச்சினைகள் படிப்படியாக மாறும். நண்பர்களின் ஆதரவு பெருகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் பாக்கியம் கிட்டும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள்.

விருச்சிக ராசி

குடும்பத்தினர்களின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்த சேரும் நாள். பணவரவு திருப்தி தரும். சொத்துகளால் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

தனுசு ராசி

உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். மங்கலச் செய்தியொன்று தேடி வரும் நாள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு.

மகர ராசி

உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். முக்கிய காரியங்களில் பொறுமையை கையாளவும். பிரியமானவர்களின் வருகை உற்சாகம் தரும். உத்யோக மாற்றம் ஏற்படும்புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கும்ப ராசி

திடீர் பணவரவுகள் கிடைக்கலாம். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும்.

மீன ராசி

உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி பலன் தரும். யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பெரியோர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள்.

WhatsApp channel

டாபிக்ஸ்