TODAY RASI PALAN: மார்ச் 17 - கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்!
மார்ச் 17ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்தும் இங்கே காண்போம்.
மேஷ ராசி
ட்ரெண்டிங் செய்திகள்
வெளியே பயணம் செய்தவர்கள் வீடு திரும்பும் நாள் வரப்போகிறது. பண வரவு உண்டாகும். பெற்றோரின் தேவையைப் பூர்த்தி செய்தீர்கள். வியாபாரத்திற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
ரிஷப ராசி
தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தையும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தைப் பொறுத்தவரைக் கூட்டாளிகள் தேவையில்லை. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொறுமையாக இருப்பது நல்லது.
மிதுன ராசி
வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. உயர் அலுவலர்களிடம் இணக்கமாக இருப்பீர்கள். விடுபட்ட விஷயங்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உற்பத்தி அதிகமாகும்.
கடக ராசி
தேவையில்லாமல் தெரியாத காரியத்தில் இறங்க வேண்டாம். முதலில் அன்பாகப் பழகுபவர்களிடம் தள்ளி இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சற்று அழுத்தம் அதிகரிக்கும். விவசாயத்தில் உங்களது வேலை அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சிம்ம ராசி
சிறிய வியாபாரமாக இருந்தாலும் பெரிய லாபம் கிடைக்கும். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் உங்களைத் தேடி வர வாய்ப்புள்ளது. நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். சிறிய முதலீடு பெரிய பலனைத் தரும்.
கன்னி ராசி
பெற்றோர்களின் ஆசீர்வாதம் இருந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தேவையான நேரத்தில் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும்.
துலாம் ராசி
உங்களது முயற்சிகளில் வேகம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் சிக்கல் ஏற்படாது. வேலை செய்யும் இடத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு கிடைத்த அதிக வாய்ப்புள்ளது. தொழிலில் அலைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
விருச்சிக ராசி
நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். விடுபட்ட வேலைகள் வேகமாக நடக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சங்கடங்கள் நீங்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு ராசி
எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். உங்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. நிலம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீரும். உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் சிக்கல்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தினரால் குழப்பம் உண்டாகும்.
மகர ராசி
கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தின் கவனமாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கச் சற்று தாமதமாகும்.
கும்ப ராசி
உங்கள் தைரியத்தால் பெரிய காரியங்கள் எளிதாக நடக்கும். திட்டமிட்டபடி தொழிலில் லாபம் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
மீன ராசி
போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கல்லூரிகளில் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் பண வரவு இருக்கும். கடன் சுமைகள் தீரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய முயற்சிகள் வெற்றி தரும். உணவு உண்ணும் போது கவனமாக இருப்பது நல்லது.