Today Rasi Palan: மார்ச் 16 - உறவினர்களிடமிருந்து தள்ளி இருங்கள்!
மார்ச் 16ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்
மேஷ ராசி
ட்ரெண்டிங் செய்திகள்
திறமையால் சிக்கல்களை தகர்த்து எருவீர்கள். கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பிள்ளைகளின் தேவை பூர்த்தியாகும்.
ரிஷப ராசி
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இடையூறு ஏற்பட்டாலும் அவ்வப்போது உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். யார் போட்டியாக வந்தாலும் வெற்றி உங்களுக்கே கிடைக்கும். சந்திராஷ்டமம் நடப்பதால் சற்று கவனமாக இருப்பது நல்லது.
மிதுன ராசி
உறவினர்கள் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. வீட்டில் புனரமைப்பு வேலைகள் நடக்க உள்ளது. தானம் செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்குவீர்கள். சிறு வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
கடக ராசி
வெளியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படும். எத்தனை தடைகள் வந்தாலும் வெற்றி காண்பீர்கள். தேவையில்லாத போட்டிகளில் ஈடுபட வேண்டாம். கல்விக்காக செலவு செய்ய வேண்டிய நேரம் இது. அன்பானவர்களுக்கு பரிசு பொருள் வாங்கி தருவீர்கள்.
சிம்ம ராசி
எடுத்த காரியம் வெற்றி பெறும். தொழிற்சாலையில் உற்பத்தி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தேவையான நேரத்தில் பண உதவி கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்க அதிக வாய்ப்புள்ளது.
கன்னி ராசி
விருப்பமான வேலை கிடைத்த நேரம் வந்துவிட்டது. ஊதிய உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. விவசாயத்தில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிதாக பொருட்கள் வாங்க அதிக வாய்ப்புள்ளது. தொடர்ந்து வந்த வழக்குகள் முடிவடையும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.
துலாம் ராசி
உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். தேவையான நேரத்தில் உதவி கிடைக்கும். சட்டென்று வரும் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தைரியமாக முடிவெடுக்க வேண்டும். கடன் சிக்கல்கள் தீரும்.
விருச்சிக ராசி
வியாபாரத்தில் உங்களது திறமையை வெற்றி கொடுக்கும். வாய் திறமையால் வெளிப்புறத்தில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தேவையானவர்களுக்கு உதவி செய்வீர்கள்.
தனுசு ராசி
சொல்லியபடி நடந்து கொள்ளாவிட்டால் செல்வாக்கு குறையும். கொடுத்த வாக்கை காப்பாற்றினால் சிறப்பு. போட்டி பந்தயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பல இடையூறுகள் வரும். வெளியூர் பயணங்கள் சென்று சிரமப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
மகர ராசி
வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் எந்த குறையும் இருக்காது. நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. உங்களை தேடி வந்து உதவி செய்வார்கள்.
கும்ப ராசி
நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாகவே அமையும். கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். உழைப்பால் உயர்வு பெறுவீர்கள்.
மீன ராசி
பெற்றோர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வெளிநாடுகள் செல்ல வேலைகள் தொடங்கும். நண்பர்களின் உதவியாய் நல்ல காரியங்கள் நடக்கும். உடன் இருப்பவர்களால் உதவி கிடைக்கும். தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும்.