தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan: மார்ச் 15 - நல்ல லாபம் கிடைக்கும்

Today Rasi Palan: மார்ச் 15 - நல்ல லாபம் கிடைக்கும்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 15, 2023 05:30 AM IST

மார்ச் 15ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.

ராசிபலன்
ராசிபலன்

மேஷ ராசி

விவசாயத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணங்களிலிருந்த பிரச்னை தீரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு அன்பு அதிகரிக்கும். அரசாங்க வேலை அமைய வாய்ப்புள்ளது.

ரிஷப ராசி

கடின உழைப்பில் வெற்றி கிடைக்கச் சற்று தாமதமாகும், எனவே மனம் தளராமல் இருங்கள். புதிதாகச் சொத்துக்கள் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாகத் தொழில் தொடங்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி

வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக இருங்கள். நம்பிக்கை துரோகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்துவிடுங்கள். வியாபாரம் செல்லும் வழியில் விட்டு விடுங்கள். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் முன்னேற்றம் இருக்காது.

கடக ராசி

பண மழையில் நனையப் போகிறீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயங்களில் தொட்டதெல்லாம் துலங்கும். வேலை செய்யும் இடத்தில் சிரமம் இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் ஏற்படும்.

சிம்ம ராசி

பணி செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும், வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதன் மூலமாகச் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும், வியாபாரத்தின் மூலம் கிடைத்த லாபத்தை வைத்து புதிய தொழில் தொடங்குவீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள், நீங்கள் தொட்ட இடமெல்லாம் பொன்னாகும்.

கன்னி ராசி

புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு உதவிகள் தானாகத் தேடி வரும், இதுவரை மந்தமாக இருந்த உங்களது தொழில் சிறப்பாக மாறும். இருக்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள், அதிக ஆசை வேண்டாம் பின்வரும் காலங்களில் அது பிரச்சினையை ஏற்படுத்தும். வியாபாரம் விருத்தியாகும், சிறுதொழில் செய்பவர்கள் அதிக லாபம் காண்பார்கள்.

துலாம் ராசி

உங்களது வீட்டில் சுப காரியங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது, திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இதுவரை பிரச்சனையாக இருந்த குடும்பச் சூழல், மகிழ்ச்சியாக மாறும், கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும், வெளியூரில் தங்க வேண்டிய அவசியம் ஏற்படும், மனதை அலைபாயாமல் வைத்திருங்கள். உங்களது வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

விருச்சிக ராசி

வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் காணப்படும், கடினமாக உழைத்தாலும் தொழிலில் லாபம் பெற வாய்ப்பில்லை. செலவு செய்வதில் எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் வியாபாரமோ, தொழிலோ மந்தமான நிலையிலேயே செல்லும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்க வாய்ப்பு இல்லை, எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

தனுசு ராசி

பயணம் செல்லும்போது பொருட்களின் மீது கவனம் தேவை. மற்றவர்களின் பேச்சை அப்படியே நம்பாதீர்கள். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகள் மீது அக்கறை தேவை.

மகர ராசி

உண்மையை மறைப்பதால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். பல சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உதவிகள் கிடைக்கச் சற்று தாமதம் ஆகும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். நல்ல உறவுகளுக்கு இடையே சில சின்ன சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பயணங்கள் நல்ல பலன்களைத் தராது.

கும்ப ராசி

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் கூட்டு முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய முயற்சிகள் முன்னேற்றத்தைத் தரும். எதிர்பாராத நேரத்தில் நண்பர்களால் உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகமாகும்.

மீன ராசி

கடினமான உழைப்பால் வியாபார முன்னேற்றம் அடையும். நண்பர்களுக்காக சில சிக்கல்களைச் சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் சிக்கல்கள் ஏற்படும். எந்த தொழிலாக இருந்தாலும் வேலையில் கவனம் தேவை. மற்றவர்கள் பேச்சைக் கேட்பது தவிர்க்க வேண்டும்.