Today Rasi Palan: மார்ச் 14 - நல்ல லாபம் கிடைக்கும்
மார்ச் 14ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
ட்ரெண்டிங் செய்திகள்
உடன்பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். உங்கள் கோபத்தால் உறவினர்களிடையே சிக்கல்கள் ஏற்படும். கடன் சிக்கல்கள் தீரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷப ராசி
உங்கள் சிறப்பான சிந்தனையால் சிக்கல்கள் தீரும். கடின உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணப் பரிவர்த்தனைகள் சுமூகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுன ராசி
கொடுத்த வார்த்தையை காப்பாற்றுவது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களது வேலையை செய்தால் மட்டும் போதும். வியாபாரத்தில் பொறுமையாக இருப்பது நல்லது. தொழில் சற்று மந்தமாக இருக்கும். உதவிகள் கிடைப்பதற்கு தாமதமாகும்.
கடக ராசி
எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. மன மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்ம ராசி
தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
கன்னி ராசி
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவமனை செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
துலாம் ராசி
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் உதவி கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் உதவிகள் உங்களை தேடி வரும். குடும்பத்தினரால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிக ராசி
தொழிலில் அதிக வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் ஏற்படும். முதலீடு செய்யும் பொழுது பொறுமையாகச் சிந்தித்துச் செயல்படுங்கள். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை, வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு ராசி
மற்றவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பீர்கள், அதனால் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும், பணவரவு அதிகரிக்கும். தொழில் சார்ந்த பிரச்னைகள் நீங்கும், சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
மகர ராசி
தேவையில்லாத நெருக்கடிகள் உங்களை விட்டு விலகும். உடல்நலம் முன்னேற்றம் அடையும். அதிக அலைச்சல் உங்களுக்கு நன்மைகளைப் பெற்றுத் தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சேமிப்பு அதிகமாகும் அளவிற்கு வருமானம் கிடைக்கும்.
கும்ப ராசி
கடினமான உழைப்பால் வருமானத்தை அதிகமாக்குவீர்கள். பணத்தின் தேவையை உணர்வீர்கள். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. உறவினர்களால் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மீன ராசி
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், எதிர்ப்புகளை எளிதாகக் கையாளுவீர்கள். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும்.