Today Rasi Palan: இந்த ராசிகளுக்கு உதவிகள் தாமதமாகலாம்!
ஜனவரி 15ஆம் தேதிக்கான ராசிபலன்கள் குறித்து இங்கே காண்போம்.
![ராசிபலன் ராசிபலன்](https://images.hindustantimes.com/tamil/img/2023/01/14/960x540/today_rasi_1673722502481_1673722510678_1673722510678.jpg)
மேஷ ராசி
வேலை சுமை அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற ஊதியம் பெறுவீர்கள். கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் பணவரவு இருக்கும். தங்கம் வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். வியாபார உத்திகளால் லாபத்தைக் காணலாம். குடும்பப் பிரச்னைகளால் மாணவர்களின் மனநிலை பாதிக்கும்.
ரிஷப ராசி
அவசியமில்லாத செலவுகளால் அலைச்சல் நேரிடலாம். பணத்தின் மதிப்பை இந்த காலத்தில் நன்கு உணர்வீர்கள். ஏதாவது பிரச்னை தோன்றி தொழிலுக்கு இடையூறை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் பற்றிய பேச்சுவார்த்தை நடக்கும். கொடுத்த வாக்குறுதியை சிரமப்பட்டு காப்பாற்றுவீர்கள். சங்கடங்களுக்கு இடையில் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
மிதுன ராசி
புத்திசாலித்தனத்தால் வருமானத்தை உயர்த்துவீர்கள். எந்த பிரச்னையானாலும் சொந்த முயற்சியால் சரி செய்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். கடந்தகால நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.
கடக ராசி
உடன்பிறந்தவர்களால் கிடைக்கவிருந்த உதவிகள் தாமதமாகலாம். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பெண்களுக்கு நகைகள் மீது ஆசை அதிகமாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் சார்ந்த விஷயங்களில் செலவு அதிகரிக்கும்.
சிம்ம ராசி
உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றக் கடுமையாக உழைப்பீர்கள். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். கடுமையான உழைப்பு நல்ல பலன்களைத் தரும். பயணங்கள் செல்ல அதிக வாய்ப்புள்ளது.
கன்னி ராசி
உடன் பிறந்தவர்களிடம் இருந்து பணவரவு உண்டாகும், நகைகள் வாங்க யோகம் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும், பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. நீங்கள் எதிர்பாராத நேரத்தில் பணவரவு வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசி
அலட்சியமாக இருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அக்கறையோடு செயல்படுவது நல்லது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தேவையான நேரத்தில் கடன் உதவி கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சிக ராசி
வார்த்தைகளில் கவனம் தேவை. தேவையில்லாத வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வது நல்லது. நேர்மையான வழியைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு வருமானத்தை அதிகரித்துத் தரும். கடினமாக உழைத்தால் கட்டாயம் முன்னேற்றம் கிடைக்கும்.
தனுசு ராசி
புதிதாகத் தொழில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. உங்களது திறமையால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். புதிய ஆர்டர்கள் உங்களைத் தேடி வரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மகர ராசி
கடுமையான உழைப்பு தற்போது பலனைத் தராது. உடன் பழகுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களை விட்டு விலகுங்கள். தேவையில்லாத அலைச்சல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சாப்பாடு விஷயத்தில் அக்கறை எடுத்துச் செயல்படுங்கள்.
கும்ப ராசி
மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை நகைச்சுவை கூட சிக்கல்களை ஏற்படுத்தும். கடன் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத வேலைகளை செய்யாதீர்கள்.
மீன ராசி
வீட்டில் மங்கள காரியங்கள் நிகழ உள்ளது. பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உங்கள் கஷ்ட நஷ்டத்தில் மனைவி துணையாக இருப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக நடக்கும். உங்களைத் தேடி நல்ல செய்தி வரும். உடன்பிறந்தவர்களால் நன்மை கிடைக்கும். தொழிலுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்