தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Great Signs Of Fortune Given By Guru Bhagavan

Guru Bhagavan 2024: குரு முரட்டு பணமழை.. இந்த ராசிகளுக்கு கட்டாயம் அதிர்ஷ்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 06, 2024 01:41 PM IST

குருபகவானால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகளை இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து மத செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தனது நட்சத்திரத்தை இடம் மாற்றுவார். இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் இடம் மாறினார். இது சுக்கிர பகவானின் நட்சத்திரமாகும். குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரப்போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. திடீரென அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை பெறும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

ரிஷப ராசி

 

சுக்கிர பகவானின் ராசியான உங்களுக்கு குரு பகவான் அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

கன்னி ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel