தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Fortune Of Lord Venus In Terms Of Major Zodiac Signs

Sukra: சுக்கிரன் கொடுக்கும் ஜாக்பாட்.. 3 ராசிகளுக்கு பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 21, 2024 02:45 PM IST

சுக்கிர பகவானால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் சுக்கிர பகவான் மார்ச் மாத தொடக்கத்திலேயே தனது உச்ச ராசியான மீன ராசிகளின் நுழைகின்றார். இதனால் திருக்கோண ராஜயோகம் உருவாகியுள்ளது இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

சுக்கிரனின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சுக்கிர பகவான் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும் நிதி நிலைமையில் நல்ல லாபம் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய திட்டங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் வணிக ஒப்பந்தங்கள் முன்னேற்றத்தை தரும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நன்மைகளுக்கு இப்பொழுதே வேலை தொடங்கிவிடும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்க போகின்றார். நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் முடிவடையும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. தொழில் துறையில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட தூர பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்

கும்ப ராசி

 

சுக்கிரனால் உருவாக்கியுள்ள ராஜயோகம் உங்களுக்கு சிறப்பாக செயல்படும். பணம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வேலையில் நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பண பலன்கள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel