தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Benefits Of Lord Surya Bhagavan

Lord Surya: மகரத்தில் புகுந்த சூரியன்..சனியோடு சேர்ந்து பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 21, 2024 05:54 PM IST

Lord Surya bhagavan: சூரிய பகவானால் ஏற்படும் நன்மைகளை இங்கே காண்போம்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தைத்திருநாளாம் மூன்றாம் தேதி பொங்கல் அன்று சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைந்தார். மகர ராசிக்குள் நுழையும் அந்த திருநாள் தான் மகர சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது.

மகர ராசியின் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகிறார். இதனால் சூரியன் மற்றும் சனி சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற சில ராசிகளை இங்கே காண போகின்றோம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சூரியன் மற்றும் சனி சேர்க்கை நிகழ்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. இதுவரை கஷ்டமான சூழ்நிலை உங்களுக்கு நல்லவையாக அமையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவிற்கு இந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பது மற்றும் பத்தாம் வீட்டில் சனிபகவான் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். அதற்கு கிடைக்கும் வியாபாரம் நன்றாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திடீரென வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுப்பார். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசி

 

சனிபகவான் மற்றும் சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.