தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Tamil New Year : மண்ட பத்திரம்.. வாகனத்தில் செல்லும் போது கவனம்.. திடீர் அதிர்ஷ்டம் அடிக்குமா? மீனம் புத்தாண்டு பலன்கள்!

Tamil New Year : மண்ட பத்திரம்.. வாகனத்தில் செல்லும் போது கவனம்.. திடீர் அதிர்ஷ்டம் அடிக்குமா? மீனம் புத்தாண்டு பலன்கள்!

Divya Sekar HT Tamil
Apr 08, 2024 01:13 PM IST

Kurothi Tamil New Year 2024 : குரோதி தமிழ் புத்தாண்டு 2024 மீன ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கிரகங்களின் இடமாற்றத்தால் இந்த குரோதி ஆண்டில் மீன ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மீனம் புத்தாண்டு பலன்கள்
மீனம் புத்தாண்டு பலன்கள்

குரோதி தமிழ் புத்தாண்டு 2024 மீன ராசிக்கு கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. கிரகங்களின் இடமாற்றத்தால் இந்த குரோதி ஆண்டில் மீன ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மீன ராசிக்கு நரசிம்மர். நரசிம்மரை எங்கு பார்த்தாலும் போய் வழிபட வேண்டும். ஏனென்றால் ஏழரை சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள். அதனால் கவனமாக இருப்பது நல்லது. அதேபோல கழுத்தில் இருந்து தலை வரை உள்ள உறுப்புகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக வண்டியில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன ராசிக்காரர்கள் இதனை கவனமாக மனதில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் தலைப்பகுதியில் தான் ஆபத்து அதிகம் உள்ளது என்பதால் வாகனம் ஓட்டும் போது அதீத கவனம் தேவை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் உங்களுக்கு திருமணம் கைகூடும், சுப காரியங்கள் நடைபெறும், பிரிந்த தம்பதிகள் இணைவார்கள், குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும், காதலன் அல்லது காதலி இல்லை என்ற கவலையில் உள்ள மீன ராசிக்காரர்களுக்கு உங்களை நேசிக்கக் கூடிய ஒருவர் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது, லாபம் ஏற்படும் பண வரவு அதிகமாக இருக்கும்.

பூர்வீகத்தை பொறுத்தவரை நீண்ட காலமாக இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் அகலும், விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் சேர்வார்கள். இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் போன்ற மாற்றங்களுக்கு தயாராக கூடிய ராசிக்காரர்கள் மீன ராசிக்காரர்கள். ஆனால் ஜென்மத்தில் ராகு இருப்பதும் ஏழாம் இடத்தில் கேது இருப்பதும் கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அதில் விட்டுக் கொடுப்பவர் நீங்களாக இருப்பது நல்லது.

அதேபோல மீன ராசிக்காரர்கள் இரவில் நேரமாக உணவு உண்டு உறங்குவது நல்லது இல்லை என்றால் கேது டிப்ரஷனை கொடுக்க கூடியவர் உங்களுக்கு டிப்ரஷன் இதன் மூலமாக கூட வரலாம். எனவே இரவில் நேரமாக சாப்பிட்டு தூங்குவது நல்லது. ஆனால் மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும், பெரிய அளவுக்கு மாற்றங்கள் ஏற்படும், திடீர் அதிஷ்டம் ஏற்படும்.

அதேபோல மீன ராசிக்காரர்கள் மனைவியிடம் பொறுத்து போவது நல்லது. சண்டை வரும்போது சமாதான கொடியை நீங்கள் தான் காட்ட வேண்டும். இல்லையென்றால் ஆபத்து உங்களுக்கு தான். எனவே பார்த்து செயல்படுவது நல்லது. எனவே மேலே சொன்னபடி நரசிம்மரை வணங்குவது நல்லது. நரசிம்மர் காயத்ரியை கேட்பது விசேஷமான அமைப்பை தரும். ராகு உங்கள் ராசியில் இருப்பதை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

நன்றி : ஜோதிடர் ஷெல்வீ

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel