தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Benefits Of Kurothi Tamil New Year 2024 For Taurus

ரிஷப ராசிக்காரர்களே ஆசைகள் வேண்டாம்.. குரோதி தமிழ் புத்தாண்டு பலன்கள்.. சிக்கிக்கொண்டு தவிப்பது உறுதி.. என்ன நடக்கும்?

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 30, 2024 01:47 PM IST

இந்த தமிழ் புத்தாண்டு 12 ராசிகளுக்கும் கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. இந்தக் குரோதி தமிழ் புத்தாண்டு 2024 ரிஷப ராசிக்கு கிடைக்கப்போகும் பலன்களை கொடுக்கப் போகின்றது.

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த தமிழ் புத்தாண்டு 12 ராசிகளுக்கும் கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. இந்தக் குரோதி தமிழ் புத்தாண்டு ரிஷப ராசிக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது.

ரிஷப ராசி

இந்த குரோதி தமிழ் புத்தாண்டு திருநாள் ஆனது ரிஷப ராசிக்கு பல்வேறு விதமான கலவையான பலன்களை கொடுக்கப்போகின்றது. கிரகங்களை மாற்றத்தால் பல்வேறு விதமான போராட்டங்களை காணக்கூடிய காலமாக இது அமையப்போகின்றது. அந்த வகையில் தமிழ் புத்தாண்டு திருநாளுக்கு பிறகு ரிஷப ராசி பெறுகின்ற பலன்கள் குறித்து இங்கே காண்போம்.

குடும்ப வாழ்க்கை

 

இந்த ஆண்டு உங்கள் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும் காலமாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையலாம். பெற்றோர்களின் வேண்டுதல் நிறைவேற கூடிய ஆண்டாக இது அமையக்கூடும் பூர்விக சொத்துக்களால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும் அதிக வாய்ப்பு உள்ளது.

கல்வி

 

இந்த தமிழ் புத்தாண்டில் இருந்து நீங்கள் அதிகம் கவனம் செலுத்தி கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும் முன்பு இருப்பதை விட தற்போது கூடுதல் அதிக கவனம் செலுத்தி கல்விக்கு முன்னுரிமை கொடுத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

தொழில்

 

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் அனுபவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் அதிக போட்டிகளில் ஏற்படும். சில நேரங்களில் உங்களுடைய முதலீடுக்கு லாபங்கள் கிடைக்காத சூழ்நிலைகள் கூட அமையலாம்.

பணி

 

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க சட்ட தாமதமாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் அமையும். நீங்கள் பொறுமையாக இல்லை என்றால் சில நேரங்களில் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூட அமையும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடினமாக உழைத்தால் கூட வருமானம் கிடைக்காத சூழ்நிலைகள் ஏற்படும்.

அரசியல்

 

அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது மிகவும் சிக்கலான காலமாக அமையக்கூடும். மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சில நேரங்களில் உங்களுக்கு மரியாதை கிடைக்கக்கூடும். பல விமர்சனங்கள் மற்றும் அவமானங்களால் நீங்கள் சிக்கலை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் அமையும். எனவே சிந்தித்து செயல்படுவது நல்லது.

கலைத்துறை

 

கலைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஓரளவு நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இருப்பினும் உங்களுடைய கடின உழைப்பு தேவைப்படுகிறது. சோர்ந்து விடாமல் முயற்சித்துக் கொண்டே இருந்தால் உங்களுக்கு முன்னேற்றம் பொறுமையாக கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம்

 

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பல்வேறு விதமான நோய்களால் நீங்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகலாம். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பெண்கள்

 

பெண்களுக்கு இது சற்று மந்தமான ஆண்டாக அமையும் ரிஷப ராசி பெண்களுக்கு ஆசைகள் அதிகம். என்பதால் உங்களுடைய ஆர்வத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பொருட்கள் அல்லது நகைகள் மீது உங்கள் ஆர்வத்தை கட்டுப்படுத்தினால் நஷ்டங்களை குறைக்கலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel