தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Benefits Of Kurothi Tamil New Year 2024 Cancer

கடக ராசிக்கு பணமழை.. கவனமாக இருக்க வேண்டும்.. தமிழ் புத்தாண்டு பலன்கள்.. சாதகமாக அமையுமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 30, 2024 04:34 PM IST

Kurothi Tamil New Year 2024: குரோதி தமிழ் புத்தாண்டு கடக ராசிக்கு மிகவும் சிறப்பானதாக அமைய உள்ளது உங்களுக்கு இந்த புத்தாண்டில் அஷ்டம சனி நடக்க உள்ளது. தொழில், வேலை, குடும்ப வாழ்க்கை உள்ளிட்டவைகளில் இந்த தமிழ் புத்தாண்டில் கடக ராசிக்கு என்ன நடக்கும் என்பது குறித்து இங்கே காணலாம்.

கடக ராசி
கடக ராசி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த குரோதி தமிழ் புத்தாண்டு கடக ராசிக்கு மிகவும் சிறப்பானதாக அமைய உள்ளது உங்களுக்கு இந்த புத்தாண்டில் அஷ்டம சனி நடக்க உள்ளது. தொழில், வேலை, குடும்ப வாழ்க்கை உள்ளிட்டவைகளில் இந்த தமிழ் புத்தாண்டில் கடக ராசிக்கு என்ன நடக்கும் என்பது குறித்து இங்கே காணலாம்.

கடக ராசி

 

இந்த குரோதி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிதாக தொடங்கும் அனைத்திற்கும் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும் அதற்கான சாதகமான சூழ்நிலைகளும் அமையும்.

குடும்ப வாழ்க்கை

 

உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். சகோதர சகோதரிகள் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மன வருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பெண்கள் மற்றும் உடல் ஆரோக்கியம்

 

பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். இருப்பினும் அஷ்டம சனி காலம் உங்களுக்கு வருகின்ற காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில உடல் சிக்கல்களை நீங்கள் அணுக வேண்டிய சூழ்நிலை அமையும் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உங்களை அறியாமல் உங்களுக்கு ஒரு சில இடங்களில் பயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கல்வி

 

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். தேர்வில் மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்கள் பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் கட்டாயம் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

அரசியல்

 

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த காலமாக இது அமைந்துள்ளது. உங்களுக்கு நல்ல பெயர் மற்றும் புகழ் உள்ளிட்டவைகள் அனைத்தும் கிடைக்கும். புதிய பொறுப்புகளால் உங்களுக்கு உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மக்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

கலைத்துறை

 

கலைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு புகழ் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாக உள்ளது. இந்த புத்தாண்டு உங்களுக்கு புதிய வாய்ப்புகளை தேடி தரும். திடீரென அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். ராஜயோகம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை தற்போது உங்களுக்கு உருவாகி உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel