மேஷ ராசி கொடி பறக்கும்.. குரோதி தமிழ் புத்தாண்டு ராசிபலன்.. வெற்றிகள் தேடி வரும்.. என்ன நடக்கப் போகுது?
Tamil New Year 2024: குரோதி தமிழ் புத்தாண்டு முதல் மேஷ ராசிக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. இதுவரை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். சிறப்பான ஆண்டாக இது அமையப்போகின்றது.
தமிழ் மாதங்களில் முதல் மாதமாக விளங்கக்கூடிய சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. சோபகிருது ஆண்டிலிருந்து குரோதி ஆண்டிற்கு அனைவரும் உள்ளே நுழையப் போகின்றோம். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வருகிறது.
இந்த தமிழ் புத்தாண்டு 12 ராசிகளுக்கும் கலவையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. இந்தக் குரோதி தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்கு கிடைக்கப்போகும் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது.
தொழில், கல்வி, அரசியல், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் மேஷ ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டில் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது என்பது குறித்து இங்கே காணலாம்.
மேஷ ராசி
வரப்போகின்ற குரோதி தமிழ் புத்தாண்டு முதல் மேஷ ராசிக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இதுவரை உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும். சிறப்பான ஆண்டாக இது அமையப்போகின்றது.
தொழில் மற்றும் வேலை
தொழிலில் இதுவரை ஏற்பட்டு வந்த போட்டி மற்றும் சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக உருவாகும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் தகுதிக்கேற்ப பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் நினைத்த இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்படும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உடன் வேலை செய்பவர்களுடன் ஆதரவு உண்டாகும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.
கல்வி
மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் சற்று மந்தமாக இருப்பார்கள். நீங்கள் நினைத்த இடத்தில் அடைய வேண்டும் என்றால் மேலும் அதிக முயற்சி தேவைப்படுகிறது கல்விக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய அதிக கவனம் செலுத்தி உழைக்க வேண்டும்.
பெண்கள்
இந்த குரோதி தமிழ் புத்தாண்டு பெண்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க கூடிய ஆண்டாக அமைய உள்ளது. நன்மைகள் மற்றும் தீமைகள் என கலவையான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பொருட்கள் மீது அதிகம் ஆசை வைப்பதை தவிர்ப்பது நல்லது. இந்த ஆண்டு கிரகங்களின் மாற்றம் சற்று வித்தியாசமாக இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சூழ்நிலைகள் கலவையாக அமையும்.
அரசியல்
அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்க கூடியவர்களுக்கு இது சிறப்பான ஆண்டாக அமைய உள்ளது. அடித்தளத்தில் உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெரிய பதவிகளை தேடி பயணம் செய்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் அமைவதற்கான சூழ்நிலை அமைய உள்ளது.
கலைத்துறை
கலைத்துறையில் பயணம் செய்பவர்களுக்கு அவர்களுடைய வாய்ப்புகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும். எண்ணங்களுக்கு ஏற்றவாறு புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல வாய்ப்புகளால் நீங்கள் மிகப்பெரிய உயரத்தை அடைவதற்கான சூழ்நிலைகள் அமையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்