தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Auspicious Days That Can Come In The Month Of Panguni

Marriage Date 2024: திருமணம் செய்ய சரியான தருணம்.. பங்குனி மாத முகூர்த்த நாட்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 25, 2024 01:50 PM IST

பங்குனி மாதத்தில் வரக்கூடிய சுப முகூர்த்த நாட்கள் குறித்து இங்கே காண்போம்.

சுபமுகூர்த்த நாட்கள்
சுபமுகூர்த்த நாட்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இறைவனுக்காக பூஜை செய்யப்படும் சில மாதங்களில் திருமணம் மற்றும் வீடு குடி புகுதல் உள்ளிட்ட செயல்பாடுகளை பலர் செய்ய மாட்டார்கள். தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் திருமணம் செய்ய மாட்டார்கள்.

மார்கழி மாதத்திலும் திருமண வைபவங்கள் போன்ற காரியங்களில் பலர் ஈடுபடுவது கிடையாது இம்மாதங்கள் தெய்வத்திற்குரிய மாதமாக கருதப்படுகின்ற காரணத்தினால் திருமண காரியங்கள் நடத்துவது கிடையாது.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உண்டு. தற்போது தமிழ் மாதங்களில் மாசி மாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. வரக்கூடியது பங்குனி மாதம் இந்த மாதத்தில் வீடு குடி புகுதல் மற்றும் திருமணம் போன்ற சுப காரியங்களை செய்யலாமா என பலருக்கும் கேள்வி எழுவதுண்டு.

பங்குனி மாதத்தில் வளர் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் இருக்கக்கூடிய சுபமுகூர்த்த நாட்கள் குறித்து இங்கே காண்போம்.

திருமண நாட்கள்

 

பங்குனி மாதத்தில் திருமணம் செய்யலாமா? என்ற கேள்வி எழுபது உண்டு. திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப காரியங்களையும் இந்த பங்குனி மாதத்தில் செய்யலாம். தெய்வத்திற்கு திருமணங்கள் நடந்த காலமாக பங்குனி மாதம் கருதப்படுகின்றது. இந்த ஆண்டு பங்குனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை நாட்களில் திருமணங்கள் செய்யலாம்.

திருமணம் செய்ய உகந்த கிழமைகள்

 

புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை திருமணங்கள் செய்தால் சிறப்பாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை திருமணம் செய்தால் நமக்கு மத்திம பலன்கள் கிடைக்கும்.

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் திருமணம் செய்வதை தவிர்த்தால் சிறப்பாக இருக்கும்.

திருமணங்கள் செய்வதற்கான சிறந்த லக்னங்கள்

மீனம், கும்பம், தனுசு, கன்னி, துலாம், சிம்மம், மிதுனம், கடகம், ரிஷபம்

பங்குனி மாத வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள்

 

பங்குனி மாதம் ஏழாம் தேதி, 20 மார்ச் 2024 புதன்கிழமை சுப முகூர்த்த நாளாகும்.

பங்குனி மாதம் 11-ம் தேதி 24 மார்ச் 2024 ஞாயிற்றுக்கிழமை சுபமுகூர்த்த நாள்

தேய்பிறை சுப முகூர்த்த நாள்

 

பங்குனி மாதம் 14ஆம் தேதி 27 மார்ச் 2024 புதன்கிழமை சுப முகூர்த்த நாள்.

பங்குனி மாதம் 22ஆம் தேதி 4 ஏப்ரல் 2024 சுப முகூர்த்த நாள்.

பங்குனி மாதம் 23ஆம் தேதி 5 ஏப்ரல் 2024 சுப முகூர்த்த நாள்.

பங்குனி உத்திர திருநாளன்று தெய்வங்களுக்கு திருமணம் நடைபெறும். தெய்வத் திருமணங்கள் நடந்த பிறகு சில பகுதிகளில் திருமணம் செய்வார்கள்.

உங்கள் குடும்பம் மற்றும் உங்களது சுற்றுவட்டார வழக்கத்தின்படி உங்களுக்கு ஏற்றவாறு திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். மேற்கண்டவாறு பங்குனி மாத வளர்பிறை நாளில் வரக்கூடிய சுபமுகூர்த்த தின நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன அதன்படி விசேஷங்களை நடத்திக் கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்