கேளுங்கள் தரப்படும்.. தட்டுங்கள் திறக்கப்படும்.. தேடுங்கள் கிடைக்கும்.. இயேசு கிறிஸ்துவின் போதனைகள்.. கிறிஸ்துமஸ் 2024
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கேளுங்கள் தரப்படும்.. தட்டுங்கள் திறக்கப்படும்.. தேடுங்கள் கிடைக்கும்.. இயேசு கிறிஸ்துவின் போதனைகள்.. கிறிஸ்துமஸ் 2024

கேளுங்கள் தரப்படும்.. தட்டுங்கள் திறக்கப்படும்.. தேடுங்கள் கிடைக்கும்.. இயேசு கிறிஸ்துவின் போதனைகள்.. கிறிஸ்துமஸ் 2024

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 24, 2024 11:40 AM IST

Christmas Day 2024: இயேசு கிறிஸ்து கூறுகின்ற போதனைகளை அனைத்தையும் பின்பற்றி அன்றைய தினம் முதல் நமது வாழ்க்கையில் நேர்மையாக மாற்றிக் கொள்வது தான் அந்த பண்டிகைக்கான மரியாதை ஆகும். இயேசு கிறிஸ்து கூறக்கூடிய உயரிய போதனைகளை இங்கே காண்போம்.

கேளுங்கள் தரப்படும்.. தட்டுங்கள் திறக்கப்படும்.. தேடுங்கள் கிடைக்கும்.. இயேசு கிறிஸ்துவின் போதனைகள்.. கிறிஸ்துமஸ் 2024
கேளுங்கள் தரப்படும்.. தட்டுங்கள் திறக்கப்படும்.. தேடுங்கள் கிடைக்கும்.. இயேசு கிறிஸ்துவின் போதனைகள்.. கிறிஸ்துமஸ் 2024

கிறிஸ்தவ மதத்தின் ஆணிவேராக திகழ்ந்து வருபவர் இயேசு கிறிஸ்து. இவருடைய பிறந்தநாள் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் ஒரு திருநாளாக விளங்கி வருகிறது. இது ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த கிறிஸ்துமஸ் திருநாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் ஒன்று கூடி அன்பளிப்புகளை பரிமாறி கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள்.

கிறிஸ்துமஸ் கூறும் அறிவுரை என்னவென்றால் மன்னிப்பு, சுயநலமற்ற அன்பு, மற்றவர்கள் மீது இரக்கம், பாகுபாடின்மை உள்ளிட்டவைகளை உணர்த்துகிறது. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் இந்த உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

மனித குலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இயேசு கிறிஸ்துவின் போதனைகள்தான். அவருடைய போதனைகள் அனைத்தும் மனிதநேயத்தோடு வாழ்க்கையை வாழக்கூடிய எண்ணத்தையும், அர்த்தமுள்ள வாழ்க்கையின் சாராம்சத்தை கண்டு கொள்ளவும் தூண்டுகின்றன.

அன்பை அடிப்படையாகக் கொண்டு இயேசு கிறிஸ்து கூறும் போதனைகள் அனைத்தும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றன. தன்னுடைய போதனைகள் மூலம் இயேசு கிறிஸ்து தன்னலமற்ற ஒரு வாழ்க்கையை ஊக்குவிக்கின்றார்.

கிறிஸ்துமஸ் திருநாளில் நண்பர்களோடு உரையாடி கொண்டாடுவது மட்டும் கிறிஸ்துமஸ் கிடையாது. இயேசு கிறிஸ்து கூறுகின்ற போதனைகளை அனைத்தையும் பின்பற்றி அன்றைய தினம் முதல் நமது வாழ்க்கையில் நேர்மையாக மாற்றிக் கொள்வது தான் அந்த பண்டிகைக்கான மரியாதை ஆகும். இயேசு கிறிஸ்து கூறக்கூடிய உயரிய போதனைகளை இங்கே காண்போம்.

இயேசுவின் போதனைகள்

  • உங்களை நேசிப்பது போலவே உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் நீங்கள் நேசிக்க வேண்டும்
  • மனிதனால் சாத்தியமற்ற அனைத்து காரியங்களும் கடவுளால் கைகூடும்
  • எனது சீடனாக இருக்க விரும்புகிறவர்கள் தன்னை வெறுத்து தனது சிலுவையை ஏற்றுக்கொண்டு என்னை பின்பற்ற வேண்டும்.
  • நாளை குறித்து கவலை கொள்ள வேண்டாம். நாளை எப்போதும் தன்னைப்பற்றி கவலைப்படும். ஆனால் ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய சொந்த செயல்களே போதுமானது.
  • சுமைகளை சுமப்பவர்கள், சோர்வுற்றவர்கள் அனைவரும் என்னை தேடி வாருங்கள் நான் உங்களை இளைப்பாறச் செய்வேன்.
  • கேளுங்கள் அது உங்களுக்காக கொடுக்கப்படும். தேடுங்கள் அது உங்களுக்கு கிடைக்கும். தட்டுங்கள் கதவுகள் திறக்கப்படும்.
  • கடுகளவு உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் போதும் ஒரு மிகப்பெரிய மழை உங்கள் வார்த்தையால் நகர்ந்து செல்லும். உங்களால் முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை.

இது மட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்து எத்தனையோ போதனைகளை மக்கள் மத்தியில் உதைத்து விட்டு சென்றுள்ளார். இதனை பின்பற்றி வாழக்கூடிய மக்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் அதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் திருநாள் கொண்டாடப்பட்ட வருகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்