SANI: புகுந்துவிட்டார் சனி.. தலையெழுத்து மாறப்போகும் 3 ராசிகள்.. இவர்களின் வீட்டில் பணம் கொட்டும்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: புகுந்துவிட்டார் சனி.. தலையெழுத்து மாறப்போகும் 3 ராசிகள்.. இவர்களின் வீட்டில் பணம் கொட்டும்

SANI: புகுந்துவிட்டார் சனி.. தலையெழுத்து மாறப்போகும் 3 ராசிகள்.. இவர்களின் வீட்டில் பணம் கொட்டும்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Aug 24, 2024 09:46 AM IST

SANI: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

SANI: புகுந்துவிட்டார் சனி.. தலையெழுத்து மாறப்போகும் 3 ராசிகள்.. இவர்களின் வீட்டில் பணம் கொட்டும்
SANI: புகுந்துவிட்டார் சனி.. தலையெழுத்து மாறப்போகும் 3 ராசிகள்.. இவர்களின் வீட்டில் பணம் கொட்டும்

இது போன்ற போட்டோக்கள்

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனிபகவான் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

மேஷ ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தில் முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் இரட்டிப்பான லாபங்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிதாக வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்ப ராசி

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது ராஜ யோகம் உங்களுக்கு கிடைத்துள்ளது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் ஆளுமை திறன் மேம்படும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

ரிஷப ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சனி பகவானின் அருளால் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9