Tamil News  /  Astrology  /  Here We Will See The 3 Rasis In Which Lord Venus Gets Yoga

Lord Venus: சுக்கிரனின் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 26, 2024 04:52 PM IST

Transit of Venus: சுக்கிர பகவானால் யோகத்தை பெறுகின்ற 3 ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது இடத்தை மாற்றுவார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று மகர ராசிக்குள் நுழைகிறார். மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடிய சுக்கிர பகவான். 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

ஜோதிட ரீதியாக சுக்கிரன் செய்யும் இடமாற்றம் சிலர் ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அப்படி அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போவது இந்த மூன்று ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதன் காரணமாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் ஒத்துழைப்பு கிடைக்கும். மூத்தவர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. காரியத்தடைகள் அனைத்தும் விலகும்.

கடக ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். கூட்டு வேலை முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் சிறப்பாக அமையும்.

மகர ராசி

 

சுக்கிரனின் சிறப்பு பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் அனைத்து விதமான அனுகிரகங்களும் வருகின்ற காரணத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வாழ்க்கை துணையின் உதவியால் பல்வேறு பணிகள் முடிவடையும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.