தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See That Lord Mercury Is Going To Enjoy Good Luck As He Enters Aries

குருவோடு சேர்கிறார் புதன்.. மேஷத்தில் அதிரடி.. பண மழையை அனுபவிக்க போகும் 3 ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 29, 2024 10:55 AM IST

Lord Mercury: புதன் பகவான் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மேஷ ராசியில் நுழைகின்றார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

புதன் பகவான்
புதன் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் தற்போது குருபகவான் சொந்த ராசியான மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகிறார். இது செவ்வாய் பகவானின் சொந்த ராசியாகும்.

புதன் பகவான் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மேஷ ராசியில் நுழைகின்றார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

மேஷ ராசி

 

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்கும். மற்றவர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களிடம் இருந்து பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை உங்களுக்கு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் பெரிய அளவு முன்னேற்றம் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வெகு நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கிக் கடந்த பணம் உங்களை தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பங்குச்சந்தையில் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel