Lord Shiva: வீட்டில் இதை செய்தால் சிவபெருமானின் முழு அருளைப் பெறலாம்
சிவபெருமானின் அருளை பெற நாம் செய்ய வேண்டிய சில வாஸ்து முறைகள் குறித்து இங்கே காண்போம்.
வாஸ்து சாஸ்திரமானது உலகளாவிய முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. முறையான வழிமுறைகளை வாஸ்து சாஸ்திரம் வழங்கியுள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மூலக்கடவுளாக விளங்க கூடியவர் சிவபெருமான். அப்படி சிவபெருமானின் சிறப்பு மாதமாக கருதக்கூடிய சிராவண மாதம் 19 வருடங்களுக்குப் பிறகு தற்போது வந்திருக்கிறது.
இந்த சிராவண மாதத்தில் இரண்டு மாதங்கள் ஒன்றாக சேர்ந்து வந்திருப்பது மிகப்பெரிய விசேஷமாகும். இது சிவனுக்குரிய காலமாகும். ஆடி மாத அமாவாசை தினத்தில் இருந்து ஆவணி மாத அமாவாசை வரை 59 நாட்கள் சிராவண மாதமாக கருதப்படுகிறது.
ஜூலை நான்காம் தேதி அன்று தொடங்கிய இந்த சிறப்புமிக்க மாதம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி முடிவடைகிறது. இந்த மாதத்தில் சிவனின் பரிபூரண அருளை பூரணமாக பெற முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே காண்போம்.
சிவலிங்க வழிபாடு
ஒருவேளை நீங்கள் சிவலிங்கம் வீட்டில் வைத்திருந்தால் அல்லது வைக்க நினைத்தால் அதற்கு இது மிகவும் சிறந்த மாதமாகும். சிவலிங்கத்தை வைப்பதற்கு வடக்கிழக்கு மூளை அதாவது வடக்கு மற்றும் கிழக்கில் வைப்பது மங்களத்தைக் கொண்டு வரும் என கூறப்படுகிறது. இது மிகவும் மங்களகரமான திசையாக கருதப்படுகிறது
ருத்ராட்ச வழிபாடு
இந்த மாதத்தில் வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். குப்பையாக இருப்பது குடும்ப முன்னேற்றத்தை தடுக்கும். இந்த மாதத்தில் சிவலிங்கத்தின் அருகே ருத்ராட்சத்தை வைத்து வழிபட்டால் வீட்டில் செழிப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ருத்ராட்சத்தை வழிபட்டு விட்டு அதனை ஒரு சிவப்பு துணியில் கட்டி அலமாரியில் வைத்து விட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் வீட்டில் பஞ்சம் வராது என கூறப்படுகிறது.
பிரதான வாசல் பரிகாரம்
சிவனுக்குரிய இந்த மாதத்தில் வாசலில் தினமும் கங்கை நீரை தெளித்தால் அதிக பலன்கள் கிடைக்கும். மேலும் வீட்டின் நுழைவு வாயிலில் ஸ்வஸ்திகா எந்திரம் வைப்பது உங்களுக்கு பலன்களை இரட்டிப்பாக கொடுக்கும் என கூறப்படுகிறது. திங்கட்கிழமை சென்று சிவபெருமானை வழிபட்டால் நினைத்தது எல்லாம் நடக்கும் என கூறப்படுகிறது.
துளசி மாடம்
பொதுவாகவே மருத்துவ குணம் கொண்ட துளசி செடியில் சிவனுக்கு மிகவும் உரியதாக கருதப்படுகிறது. அதேபோல விஷ்ணு பகவானுக்கும் இது உரிய செடியாகும். வீட்டின் வடகிழக்கு திசை நோக்கி துளசிச் செடியை நட்டு வைத்து தினமும் வழிபட்டால் அதிர்ஷ்டம் பெருகும் என கூறப்படுகிறது.
செழிப்பை கொடுக்கும் பொருட்கள்
மரத்திலான பொருட்களை கிழக்கு திசையில் வைக்க வேண்டும். அப்படி செய்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும் எனக் கூறப்படுகிறது. நேர்மறை ஆற்றல் அதிகரித்தால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்