+2-க்கு பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்..! ஜோதிடம் சொல்வது என்ன? - முழு விவரம் தெரிஞ்சிக்கோங்க
பிளஸ் 2- க்கு பிறகான படிப்பு நமது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும். படிப்பதற்கு நிறைய படிப்புகள் இருந்தாலும், பலருக்கும் அடுத்து என்ன படிப்பது என்பதில் வழிகாட்டுதல் தேவைப்படுவதை போல் ஜோதிட ஆலோசனைகளும் அவசியம்.

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற சொல்லாடல் உண்டு. அதாவது ஒருவர் எங்கு சென்றாலும் அவரது கல்வி தகுதியை வைத்து உரிய மரியாதை வழங்கப்படுவது வழக்கம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
இந்நிலையில் மாணவர்கள் பிளஸ் 2- க்கு பிறகு என்ன படிக்கிறார்கள் என்பது தான் நமது எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும். படிப்பதற்கு நிறைய படிப்புகள் இருந்தாலும், பலருக்கும் அடுத்து நாம் என்ன படிப்பது என்பதில் வழிகாட்டுதல் தேவைப்படுவதை போல் ஜோதிட ஆலோசனைகளும் அவசியம்.
சம்பந்தமே இல்லாத துறையில் வேலை
ஏனெனில் 100- ல் 5 சதவீதம் பேர் மட்டுமே படித்த படிப்பிற்கேற்ற வேலையை செய்கின்றன. எஞ்சிய 95 சதவீதம் பேர் படித்த படிப்பிற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத துறையில் வேலை செய்கின்றனர்.
சிலர் தவறான வழிகாட்டுதலால் சிக்கலான படிப்பை தேர்ந்தெடுத்து நேரத்தையும், பணத்தையும் விரயம் செய்கின்றனர். உதாரணமாக 4, 5 ஆண்டுகள் நீட் தேர்வுக்கு முயற்சி செய்து விட்டு பிறகு தேர்ச்சி பெற முடியாமல் இன்ஜினியரிங் அல்லது வேறொரு படிப்பை தேர்வு செய்கின்றனர். மருத்துவராக வேண்டும் என்ற அமைப்பு ஜாதகத்தில் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்தால் காலம், பணம் விரயம் ஆவதை தடுக்கலாம்.
சிக்கலான நேரம் யாருக்கு?
மீனம், மேஷம், சிம்ம ராசிகளில் பிறந்த மாணவ, மாணவிகளுக்கு இது சிக்கலான காலகட்டம். ஏனெனில் இரண்டரை ஆண்டுகளுக்கு மீன ராசிக்கு ஜென்ம சனியும், மேஷ ராசிக்கு விரைய சனியும், சிம்ம ராசிக்கு அஷ்டம சனியும் நடைபெறுவதால் இந்த மூன்று ராசிகளில் பிறந்த மாணவ, மாணவிகள் உயர் கல்வியை தேர்வு செய்வதில் எச்சரிக்கை, கவனம் தேவை.
வாழ்க்கைக்கு தேவையில்லாத படிப்பில் சேரும் சூழல் உருவாகலாம்
மதிப்பெண் குறைந்து நீங்கள் விரும்பும் பாடப்பிரிவு கிடைப்பதில் தடை ஏற்படும். அல்லது விரும்பும் கல்லூரி, கல்வி நிறுவனங்களில் சேர முடியாத நிலை உண்டாகும். உயர் கல்வியை தொடர தடை வந்து சேரும். சிலர் வாழ்க்கைக்கு தேவையில்லாத படிப்பில் சேரும் சூழல் உருவாகும் என்பதால் உஷாராக இருப்பது நல்லது.
ஜோதிட ரீதியாக தெரிந்து கொண்டு பாடப்பிரிவு தேர்வு செய்யலாம்.
அடுத்த பதிவில் இருந்து எந்தெந்த லக்னங்களில் பிறந்தவர்கள் என்ன படிக்கலாம் என்று பார்க்கலாம்..
ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர்
astrovenkataeswar@gmail.com
91590 13118
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்