தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பிறப்பிலேயே பணத்திற்கே மிகவும் பிடித்த ராசிகள்.. காந்தம் போல இழுத்துடுவாங்க.. கோடீஸ்வரராக இருப்பது உறுதி

பிறப்பிலேயே பணத்திற்கே மிகவும் பிடித்த ராசிகள்.. காந்தம் போல இழுத்துடுவாங்க.. கோடீஸ்வரராக இருப்பது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 28, 2024 05:41 PM IST

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சிலருக்கு காசு கையில் நிற்பது கிடையாது. ஆனால் குறிப்பிட்ட சில ராசிகள் பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் யோகத்தை பெற்றிருப்பார்கள். அந்த வகையில் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகத்தை பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

கோடீஸ்வர யோகம்
கோடீஸ்வர யோகம்

எவ்வளவு பணம் வந்தாலும் ஒரு சில ராசிகளால் அந்த பணத்தை சேமிக்கவும் அல்லது கையாளவோ முடியாது. கடைசி வரை கடன்காரர்களாக இருப்பார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சிலருக்கு காசு கையில் நிற்பது கிடையாது. ஆனால் குறிப்பிட்ட சில ராசிகள் பிறப்பிலேயே பணத்தை தன் வசம் ஈர்க்கும் யோகத்தை பெற்றிருப்பார்கள். அந்த வகையில் பிறப்பிலேயே கோடீஸ்வர யோகத்தை பெற்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

விடாமுயற்சியுடன் செயல்பட கூடிய திறன் கொண்டவர்கள் நீங்கள். பணத்தின் மீது எப்போதும் உங்களுக்கு ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் எப்போதும் சிறந்ததை தவிர வேறு எதையும் விரும்புவது கிடையாது. நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு எந்த எல்லைக்கும் சொல்வீர்கள். விரும்பும் வாழ்க்கையை பெறுவதற்காக கடினமாக உழைத்தீர்கள். அதனால் நீங்கள் சீக்கிரம் பணத்தை சேமிப்பதில் ஈடுபாடு காட்டுவீர்கள். உங்களுடைய அனைத்து முயற்சிகளும் பணத்தை நோக்கியே இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பணத்தின் வருகை அதிகமாக இருக்கும்.

ரிஷப ராசி

 

விடாப்பிடியான குணத்தோடு எடுத்த காரியத்தை வெற்றி அடையும் வரை விடாமல் துரத்தும் ராசிக்காரர்கள். நீங்கள் உங்கள் எண்ணத்தைத் தவிர மற்ற எண்ணங்களை எப்போதும் காது கொடுத்து கேட்க மாட்டீர்கள். எப்போதும் தன்னை புதுமையாக காட்டிக்கொள்ள விரும்பக் கூடியவர்கள் கடினமாக உழைத்த தயாராக இருப்பீர்கள். இதன் காரணமாக உங்களுக்கு எல்லை இல்லா செல்வம் தேடி வரும். கீழே இறங்கி சென்றாலும் உங்களுடைய கடின உழைப்பு பணத்தின் பக்கத்தில் கொண்டு செல்லும் அதனால் உங்களுக்கு பணத்தின் வருகை அதிகமாக இருக்கும்.

துலாம் ராசி

 

எப்போதும் ஒரு குறிக்கோள்களோடு இருக்கக்கூடியவர்கள் நீங்கள். கடின உழைப்புக்கு பெயர் பெற்ற நீங்கள் சிறிய துரும்பாக இருந்தாலும் அதனுடைய மதிப்பு தெரிந்து அதனை பத்திரமாக பார்த்துக் கொள்வீர்கள். அதுபோல பணத்தின் மீது உங்களுக்கு அதிக கவனம் எப்போதும் இருக்கும். கடினமாக உழைத்து பெற்ற பணத்தை அதிகமாக செலவழிக்காமல் சேமித்து அதன் மூலம் பெருக்கத்தை ஏற்படுத்துவீர்கள். உங்களுடைய அக்கறையான தன்மை உங்களுக்கு பணவரவு அதிகப்படுத்தும். அதுவே உங்களை வசதியான நிலைமைக்கும் கொண்டு செல்லும்.

கன்னி ராசி

 

தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து கொண்டு எடுத்த காரியத்தில் வெற்றி அடைய மிகப்பெரிய முயற்சியில் ஈடுபடக்கூடிய ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். தன்னைச் சார்ந்தவர்களுக்கும் எப்போதும் உதவியாக இருப்பீர்கள். ஆனால் தனக்கென தோன்றிய அனைத்து விஷயங்களையும் செய்து விட்டு தான் அடுத்த வேளையில் பார்ப்பீர்கள். சுய வளர்ச்சிக்காக எப்போதும் பயணிக்க கூடிய உங்களுக்கு பண வரவு எப்போதும் இருக்கும். ஒரு பொருளின் மதிப்பை உணர்ந்து அதனை பெறுவதற்காக இந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களில் நீங்களும் ஒருவர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel