தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: இன்று உதயமான சுக்கிரன்.. இனி இந்த ராசிகள் காட்டுல பணமழை தான்.. கையில் பிடிக்க முடியாது!

Money Luck: இன்று உதயமான சுக்கிரன்.. இனி இந்த ராசிகள் காட்டுல பணமழை தான்.. கையில் பிடிக்க முடியாது!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 11, 2024 11:49 AM IST

Lord Venus: சுக்கிரன் ஜூலை பதினோராம் தேதியான இன்று கடக ராசியில் உதயம் ஆகின்றார். சுக்கிர பகவானின் அஸ்தமனத்தால் நல்ல பலன்கள் கிடைக்காமல் இருந்தது. தற்போது சுக்கிரனின் உதயத்தால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

இன்று உதயமான சுக்கிரன்.. இனி இந்த ராசிகள் காட்டுல பணமழை தான்.. கையில் பிடிக்க முடியாது!
இன்று உதயமான சுக்கிரன்.. இனி இந்த ராசிகள் காட்டுல பணமழை தான்.. கையில் பிடிக்க முடியாது!

நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிர பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிர பகவான் அஸ்தமனம் உதயம் மிகப்பெரிய தாக்கத்தை மற்ற ராசிகளுக்கு ஏற்படுத்தும்.

இந்நிலையில் சுக்கிரன் கடந்த ஏப்ரல் மாதம் மேஷ ராசியில் இருக்கும்போது அஸ்தமனம் ஆனார். இந்நிலையில் ஜூலை பதினோராம் தேதியான இன்று கடக ராசியில் உதயம் ஆகின்றார். சுக்கிர பகவானின் அஸ்தமனத்தால் நல்ல பலன்கள் கிடைக்காமல் இருந்தது. தற்போது சுக்கிரனின் உதயத்தால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் சுக்கிர பகவானின் உதயம் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. நல்ல ஆடம்பரம் மற்றும் வசதி வாய்ப்பு உள்ள வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பண வரவில் இருந்து குறையும் இருக்காது. இது நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் சுக்கிரனின் உதயம் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை பெற்று தரும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாத அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிதி நிலைமையில் நல்ல உயர்வு உங்களுக்கு கிடைக்கும். புதிதாக பொருட்களை வாங்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் சுக்கிரனின் உதயம் சாதகமாக அமைந்துள்ளது. எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு பணவரவு இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிறைய பணம் சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அதிகம் உண்டாகும். 

வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமையால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தருவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9