Money Luck: கோடிகளை கொட்டும் குரு.. அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. நட்சத்திரத்தில் ராஜ வாழ்க்கை-here we will see about the zodiac signs who get raja yoga life in lord guru nakshatra transit - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: கோடிகளை கொட்டும் குரு.. அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. நட்சத்திரத்தில் ராஜ வாழ்க்கை

Money Luck: கோடிகளை கொட்டும் குரு.. அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. நட்சத்திரத்தில் ராஜ வாழ்க்கை

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 14, 2024 11:31 AM IST

Lord Guru: குரு பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது சந்திர பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். இதனால் சில ராசிகள் செல்வ செழிப்பை அனுபவிக்கப் போகின்றன. அதில் எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கோடிகளை கொட்டும் குரு.. அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. நட்சத்திரத்தில் ராஜ வாழ்க்கை
கோடிகளை கொட்டும் குரு.. அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. நட்சத்திரத்தில் ராஜ வாழ்க்கை

அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் குரு பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். இது சந்திர பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். இதனால் சில ராசிகள் செல்வ செழிப்பை அனுபவிக்கப் போகின்றன. அதில் எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல செய்தியை தேடிக் கொண்டு வந்து தரும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பல்வேறு துறைகளில் வெற்றி காண்பீர்கள். கூடுதலாக அணிவரிடத்திலும் மரியாதை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கடக ராசி

குருபகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உறவினர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். 

வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

தனுசு ராசி

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தர போகின்றது. ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்த காரணத்தினால் உங்களுக்காக அதிர்ஷ்டம் தேடி வரப்போகின்றது. சிறப்பான முன்னேற்றம் உங்களுக்கு இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதையா அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தருவார்கள். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9