Lord Venus: அதிர்ஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்.. மூன்று ராசிகளுக்கு சிம்மத்தில் கொட்டும் பணமழை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Venus: அதிர்ஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்.. மூன்று ராசிகளுக்கு சிம்மத்தில் கொட்டும் பணமழை

Lord Venus: அதிர்ஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்.. மூன்று ராசிகளுக்கு சிம்மத்தில் கொட்டும் பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 23, 2024 05:26 PM IST

Lord Venus: சுக்கிர பகவான் சிம்ம ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அந்த ராஜ ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

அதிர்ஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்.. மூன்று ராசிகளுக்கு சிம்மத்தில் கொட்டும் பணமழை
அதிர்ஷ்ட கதவை திறக்கும் சுக்கிரன்.. மூன்று ராசிகளுக்கு சிம்மத்தில் கொட்டும் பணமழை

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சுக்கிர பசு தான் கடக ராசியில் தற்போது பயணித்து வருகிறார். வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார் இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும்.

சுக்கிர பகவான் சிம்ம ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெறுகின்றனர். அந்த ராஜ ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

கடக ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு நிறைய செல்வம் சேரும். வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

வியாபாரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிறைய லாபம் கிடைக்கக்கூடிய தொழிலில் நீங்கள் முதலீடு செய்வீர்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

கடுமையான போட்டிகளிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் வெற்றி பெறும். 

வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9