தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru: உதயத்தில் கொட்டும் குரு அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள் பணத்தில் விழுந்தது யார்?

Lord Guru: உதயத்தில் கொட்டும் குரு அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள் பணத்தில் விழுந்தது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 20, 2024 01:06 PM IST

Lord Guru: மே மாதத்திற்கு பிறகு ரிஷப ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். குரு பகவான் இந்த மாத தொடக்கத்தில் அஸ்தமன நிலையிலிருந்து உதய நிலைக்கு மாறினார். குரு பகவானின் உதயமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது.

உதயத்தில் கொட்டும் குரு அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள் பணத்தில் விழுந்தது யார்?
உதயத்தில் கொட்டும் குரு அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள் பணத்தில் விழுந்தது யார்?

அந்த வகையில் குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் மே மாதம் மூன்றாம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார், இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.

மே மாதத்திற்கு பிறகு ரிஷப ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். குரு பகவான் இந்த மாத தொடக்கத்தில் அஸ்தமன நிலையிலிருந்து உதய நிலைக்கு மாறினார். குரு பகவானின் உதயமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குரு பகவான் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் முன்பு இருந்ததை விட யோகம் அதிகமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். 

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உயர் கல்வி படிப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மொத்தத்தில் உங்களுக்கு குரு பகவானால் நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகின்றது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். 

புதிய லாபம் மற்றும் முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

மகர ராசி

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தை தொடர்பான இப்ப பல்வேறு விதமான நல்ல செய்திகளை உங்களை தேடி வரும். மாணவர்கள் முன்பு இருந்ததைவிட கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அடுத்த ஆண்டு உங்களுக்கு எதிர்பாராத நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

சிந்தனையாளர்கள் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். சிறப்பான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வருமானத்தை அதிகப்படுத்தி கொடுக்கும். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணவரவு இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9