Mercury: புரட்டி எடுக்க போகும் புதன்.. சிக்கிக்கொண்ட ராசிக்காரர்கள்
புதன் பகவானிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் காதல், கல்வி, பகுத்தறிவு, அறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 21, 2025 04:50 PMபணமழை: உருவாகிறது கஜகேசரி யோகம்.. திடீர் முன்னேற்றம்.. செல்வம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
Apr 21, 2025 04:25 PMஇன்றைய ராசிபலன் : ஏப்ரல் 21 , 2025 மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
Apr 20, 2025 05:07 PMஅடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 20, 2025 11:38 AMஅதிர்ஷ்ட ராசிகள்: ஏப்ரல் இறுதி வாரத்தில் டாப் கியரில் ஜெயிக்கும் 5 ராசிகள் - விவரம் உள்ளே!
Apr 20, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 20 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 19, 2025 04:38 PMமீன ராசி: கஷ்ட இருளில் சிக்கிய ராசிகள்.. சிரமங்களை கொடுக்கும் சனி ராகு சேர்க்கை.. உங்க ராசி என்ன?
புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது புதன் பகவான் சனி பகவானின் ராசியான மகர ராசியில் பயணம் செய்த வருகின்றார். கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அன்று மகர ராசியில் புதன் பகவான் அஸ்தமனம் ஆனார். இவருடைய அனைத்து வித செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும்.
புதன் பகவானின் அஸ்தமனம் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கின்ற காரணத்தினால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
புதன் பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ள காரணத்தினால் உங்களுக்கு வேலையில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட முடிவை எடுப்பதற்கு முன்னர் பலமுறை யோசிக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் அஸ்தமிக்கின்றார். உங்களுக்கு பணம் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கூட்டு வணிகம் முயற்சிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது நிதி இழப்புகள் ஏற்படக்கூடும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமிக்கின்றார். உங்களுக்கு பண இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் மன அழுத்தங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
