சூறாவளியாக சுழற்றி அடிக்கும் சுக்கிரன்.. வாழ்க்கையில் மாற்றம் காணும் ராசிகள்.. அதிர்ஷ்டம் நடந்து வருகிறது
Lord Venus: சுக்கிரனின் அனுஷம் நட்சத்திரம் பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரன் செய்யக்கூடிய அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 22, 2025 09:30 AMகஜகேசரி ராஜ யோகத்தால் பண மழை கொட்டும் யோகம் பெற்ற ராசிகள்.. தொட்டதெல்லாம் வெற்றி யாருக்கு பாருங்க!
Apr 22, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : ஏப்ரல் 22 ,2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே.. இன்று உங்கள் நாள் சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 21, 2025 04:50 PMபணமழை: உருவாகிறது கஜகேசரி யோகம்.. திடீர் முன்னேற்றம்.. செல்வம், புகழ், அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
Apr 21, 2025 04:25 PMஇன்றைய ராசிபலன் : ஏப்ரல் 21 , 2025 மேஷம் முதல் மீனம் வரையான 12 ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
Apr 20, 2025 05:07 PMஅடுத்தடுத்து பெயர்ச்சியாகும் புதன் பகவான்.. லாபத்தை பன்மடங்கு பெற்று அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 20, 2025 11:38 AMஅதிர்ஷ்ட ராசிகள்: ஏப்ரல் இறுதி வாரத்தில் டாப் கியரில் ஜெயிக்கும் 5 ராசிகள் - விவரம் உள்ளே!
அந்த வகையில் அக்டோபர் 16ஆம் தேதி அன்று சுக்கிரன் விசாகம் நட்சத்திரத்தில் இருந்து அனுஷம் நட்சத்திரத்திற்கு சென்றார். சுக்கிரனின் அனுஷம் நட்சத்திரம் பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.
சிம்ம ராசி
சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றும் உங்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றியை தேடி தரும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
கன்னி ராசி
உங்கள் ராசியில் சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் சிறப்பாக அமைந்துள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். வாழ்க்கை துணையின் மூலம் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
தனுசு ராசி
சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு எதிர்பாராத முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முழு கவனத்தை செலுத்தினால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
