தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mars Sani: சனி மீது விழுந்த செவ்வாய்.. 3 ராசிகள் கதறுவது உறுதி.. கண்ணீரில் தத்தளிக்க போவது யார்?

Mars Sani: சனி மீது விழுந்த செவ்வாய்.. 3 ராசிகள் கதறுவது உறுதி.. கண்ணீரில் தத்தளிக்க போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 22, 2024 04:03 PM IST

Mars Sani: கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் செவ்வாய் கிரகத்தின் மூன்றாவது அம்சத்தை செலுத்துகிறார். செவ்வாய் கிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானின் மூன்றாம் அம்சம் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் கஷ்டத்தை ஏற்படுத்தப் போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி மீது விழுந்த செவ்வாய்.. 3 ராசிகள் கதறுவது உறுதி.. கண்ணீரில் தத்தளிக்க போவது யார்?
சனி மீது விழுந்த செவ்வாய்.. 3 ராசிகள் கதறுவது உறுதி.. கண்ணீரில் தத்தளிக்க போவது யார்?

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்.

அந்த வகையில் ஜூன் ஒன்றாம் தேதியன்று மதியம் மேஷ ராசியில் நுழைந்தார். செவ்வாய் பகவான். வருகின்ற ஜூலை பன்னிரண்டாம் தேதி வரை இதே ராசியில் இருப்பார். கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் செவ்வாய் கிரகத்தின் மூன்றாவது அம்சத்தை செலுத்துகிறார். செவ்வாய் கிரகத்தில் இருக்கக்கூடிய சனிபகவானின் மூன்றாம் அம்சம் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் கஷ்டத்தை ஏற்படுத்தப் போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

 

செவ்வாய் பகவானிடம் இருக்கக்கூடிய சனி பகவானின் மூன்றாவது அம்சம் உங்களுக்கு பல்வேறு விதமான தீங்கை விளைவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் இன்னும் முடிவதற்கு சட்ட தாமதமாகும். நிதி இழப்பை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வருமானத்திற்கான ஆதாரங்கள் குறையக்கூடும். சில விஷயங்கள் உங்களுக்கு மன கஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும். 

குடும்பத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி

 

உங்கள் ராசிகள் சனி பகவானின் மூன்றாம் அம்சம் பல்வேறு விதமான சிக்கல்களில் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. ஒன்றுபட்ட விஷயங்கள் பிரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படாது. கடன் சுமை உங்களுக்கு அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான தவறுகளால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் வேலை செய்பவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் செவ்வாய் கிரகத்தின் சனி பகவானின் மூன்றாவது அம்சம் எதிர்மறையான காரியங்களை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அதிகம். ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் உடன் பிறந்தவர்களோடு வாக்குவாதம் ஏற்படக்கூடும். 

திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடப்பதற்கு சற்று தாமதமாகும். பல்வேறு விதமான தடைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பண முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. உங்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு இன்னும் சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9