தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Vakra Peyarchi: சனி தூக்கி அடிக்க போகிறார்.. கதற கதற ஓடும் ராசிகள்.. சிக்கி சிதைவது உறுதி.. உங்க ராசி இருக்கா?

Sani Vakra Peyarchi: சனி தூக்கி அடிக்க போகிறார்.. கதற கதற ஓடும் ராசிகள்.. சிக்கி சிதைவது உறுதி.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 04, 2024 12:48 PM IST

Sani Vakra Peyarchi: ஜூன் 29ஆம் தேதி அன்று சனிபகவான் வக்கிர பயணத்தை மேற்கொண்டார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். சனி பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சிலர் ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

சனி தூக்கி அடிக்க போகிறார்.. கதற கதற ஓடும் ராசிகள்.. சிக்கி சிதைவது உறுதி.. உங்க ராசி இருக்கா?
சனி தூக்கி அடிக்க போகிறார்.. கதற கதற ஓடும் ராசிகள்.. சிக்கி சிதைவது உறுதி.. உங்க ராசி இருக்கா?

சனிபகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டைப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று சனிபகவான் வக்கிர பயணத்தை மேற்கொண்டார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். சனி பகவானின் வக்கிர பயணத்தால் ஒரு சிலர் ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான தடைகள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நவம்பர் மாதம் வரை நீங்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். உங்களுக்கு புதிய இடத்திற்கு இடமாற்றம் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முயற்சிகள் ஏதேனும் இருந்தால் அதனை தள்ளிப் போடுவது நல்லது. அவசரப்பட்டு எந்த காரியத்திலும் இறங்காமல் இருந்தால் முன்னேற்றம் இருக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேஷ ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நல்ல பலன்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். எடுத்துக் கொண்ட வேலைகள் அனைத்தும் முடிவதற்கு சற்று தாமதமாகும். வேலைகளில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக தான் முன்னேறும். நிதி நிலைமை பலவீனமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் அதிகரிக்க கூடும். மோசமான வாழ்க்கை முறை உங்களுக்கு உணவு பழக்கத்தினால் உருவாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் தனி கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. எச்சரிக்கையாக இருங்கள்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனிபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களின் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். சிறிய வேலைகளுக்கு கூட பெரிய தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். 

கடினமான உழைப்பும் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தராது. புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு சற்று தாமதமாகும். வியாபாரம் கடுமையான போட்டியில் சந்திக்க நேரிடும். சிலருக்கு நஷ்டங்கள் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. நவம்பர் மாதம் வரை உங்களுக்கு நிதி நிலைமையில் சிக்கல்கள் இருக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9