தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: அதிர்ஷ்ட ராசிகள்.. உதயமாகும் சுக்கிரன்.. பணமழை கொட்டும்.. யோகம் தேடி வருகுது.. உங்க ராசி என்ன?

Money Luck: அதிர்ஷ்ட ராசிகள்.. உதயமாகும் சுக்கிரன்.. பணமழை கொட்டும்.. யோகம் தேடி வருகுது.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 28, 2024 10:59 AM IST

Lord Venus: அசுரர்களின் குருவாக திகழ்ந்துவரும் சுக்கிர பகவான் தற்போது அஸ்தமன நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் சுக்கிரன் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.

அதிர்ஷ்ட ராசிகள்.. உதயமாகும் சுக்கிரன்.. பணமழை கொட்டும்.. யோகம் தேடி வருகுது.. உங்க ராசி என்ன?
அதிர்ஷ்ட ராசிகள்.. உதயமாகும் சுக்கிரன்.. பணமழை கொட்டும்.. யோகம் தேடி வருகுது.. உங்க ராசி என்ன?

அசுரர்களின் குருவாக திகழ்ந்துவரும் சுக்கிர பகவான் தற்போது அஸ்தமன நிலையில் மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் சுக்கிரன் உதயமாகின்றார். சுக்கிரனின் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் சுக்கிர பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய செய்திகள் உங்களைத் தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் முடிவடையும். திட்டமிட்ட வேலைகள் நீங்கள் எதிர்பார்த்தது போல சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சிந்திக்கும். திறனால் பல முன்னேற்றங்கள் உங்களை தேடி வரும். நீங்கள் எடுக்க முடிவுகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயமாக உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள் கல்விக்காக வெளிநாடு செல்லக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உயர் அலுவலர்களோடு இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9