Zodiac Signs: ஜூலையில் வேலையை தொடங்கிய செவ்வாய்.. பிரகாசமாகும் மூன்று ராசிகள்.. வெற்றி யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Zodiac Signs: ஜூலையில் வேலையை தொடங்கிய செவ்வாய்.. பிரகாசமாகும் மூன்று ராசிகள்.. வெற்றி யாருக்கு?

Zodiac Signs: ஜூலையில் வேலையை தொடங்கிய செவ்வாய்.. பிரகாசமாகும் மூன்று ராசிகள்.. வெற்றி யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 19, 2024 10:53 AM IST

Lord Mars: ரிஷப ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜூலையில் வேலையை தொடங்கிய செவ்வாய்.. பிரகாசமாகும் மூன்று ராசிகள்.. வெற்றி யாருக்கு?
ஜூலையில் வேலையை தொடங்கிய செவ்வாய்.. பிரகாசமாகும் மூன்று ராசிகள்.. வெற்றி யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

மேஷ ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் கடந்த ஜூலை 12ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார் இது சுக்கிர பகவான் ராசியாகும். செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்களாக விளங்கி வருகின்றனர்.

ரிஷப ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புத்திசாலித்தனத்தில் முன்னேற்றம் இருக்கும். மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். கூட்டு வியாபாரம் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

கும்ப ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார் அதனால் உங்களுக்கு நல்ல வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். எடுத்துக் கொண்டு வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செக்கில் கடந்த பணம் உங்களைத் தேடி வரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். புத்திசாலித்தனத்தால் அனைத்து காரியங்களும் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். மனதில் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். 

பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். மற்றவர்களை ஈர்க்கும் வகையில் உங்களுடைய செயல்கள் அனைத்தும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்களால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பணம் வரவில் இந்த குறையும் இருக்காது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9