தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani: சனி மிதக்க விடும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தின் வாயிலில் நுழைவது யார்?.. உங்க ராசி என்ன?

Lord Sani: சனி மிதக்க விடும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தின் வாயிலில் நுழைவது யார்?.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 13, 2024 12:35 PM IST

lord Sani: ஜூன் 30-ம் தேதி என்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை சனி பகவான் மேற்கொள்ள உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனி மிதக்க விடும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தின் வாயிலில் நுழைவது யார்?.. உங்க ராசி என்ன?
சனி மிதக்க விடும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தின் வாயிலில் நுழைவது யார்?.. உங்க ராசி என்ன?

lord Sani: நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக சனி பகவான் திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள்.

சனிபகவான் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 30-ம் தேதி என்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை சனி பகவான் மேற்கொள்ள உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கண்டிருக்கும் வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். சனி பகவானின் அருளால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றங்கள் கிடைக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் தேடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஜூலை மாத தொடக்கத்திலிருந்து உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9