Lord Ketu: அமைதி கிடைத்த ராசிகள்.. அனுபவத்தை கொடுக்கும் கேது.. அசராமல் உழைக்கும் ராசிகள்
Lord Ketu: கேது பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Ketu: நவக்கிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவானின் பயணங்கள் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
நவகிரகங்களில் கேது பகவான் மற்றும் ராகு பகவான் இவர்கள் இருவரும் அசுப கிரகங்களாக கருதப்படுகின்றனர். தனக்கென சொந்த ராசி இல்லாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக
கேது பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல கேது பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.
இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணத்தைச் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை கேது பகவான் மாற்றுகிறார். கேது பகவானின் கன்னி ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் கேது பகவானின் தாக்கம் கட்டாயம் இருக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் உங்கள் ராசியில் ஆறாவது பெட்டியில் சஞ்சாரம் செய்து வருகிறார். கேது பகவான் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும். நிறைவேறும்.
புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். கேது பார்வையின் தாக்கம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும்.
கடக ராசி
கேது பகவான் இடமாற்றம் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். பெரிய காரியங்கள் வெற்றி அடையும். நீண்ட நாள் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
வெளிநாட்டில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிக லாபம் மீட்டக் கூடிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வரும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியில் 11-வது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஞானம் மற்றும் அறிவு அதிகரிக்கும். சரியான முடிவுகள் முன்னேற்றத்தை பெற்றுத்தரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
உங்கள் வெற்றி சரித்திர குறியீடாக மாறும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் தேடி வர போகின்றது. இறுதியாக உங்களுக்கு செலவுகளில் இருந்து விடுதலை கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் ஈட்டுவதில் நல்ல லாபம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.