தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Budhan Luck: விளையாட்டாக பணத்தை கொட்டும் புதன்.. வாரி அணைக்கும் ராசிகள் இவர்கள்தான்.. பணமழை உறுதியானது

Budhan Luck: விளையாட்டாக பணத்தை கொட்டும் புதன்.. வாரி அணைக்கும் ராசிகள் இவர்கள்தான்.. பணமழை உறுதியானது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 30, 2024 02:52 PM IST

Lord Mercury: கடக ராசியில் பயணம் செய்ய தொடங்கிய புதன் பகவானின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். வரும் ஜூலை 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

விளையாட்டாக பணத்தை கொட்டும் புதன்.. வாரி அணைக்கும் ராசிகள் இவர்கள்தான்.. பணமழை உறுதியானது
விளையாட்டாக பணத்தை கொட்டும் புதன்.. வாரி அணைக்கும் ராசிகள் இவர்கள்தான்.. பணமழை உறுதியானது

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மிதுன ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசிக்கான கடக ராசியில் நுழைந்தார்.

குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடக ராசியில் பயணம் செய்ய தொடங்கிய புதன் பகவானின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். வரும் ஜூலை 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும், காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைந்து முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்க உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். நீண்ட தூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9