Sukra 2024: சுக்கிரன் தலை கீழாக கொட்டுகிறார்.. பணத்தில் மூச்சு முட்டும் ராசிகள்.. உங்கள் ராசியில் இருக்கா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra 2024: சுக்கிரன் தலை கீழாக கொட்டுகிறார்.. பணத்தில் மூச்சு முட்டும் ராசிகள்.. உங்கள் ராசியில் இருக்கா?

Sukra 2024: சுக்கிரன் தலை கீழாக கொட்டுகிறார்.. பணத்தில் மூச்சு முட்டும் ராசிகள்.. உங்கள் ராசியில் இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 01, 2024 10:58 AM IST

Lord Venus: அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்தார். ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது.

சுக்கிரன் தலை கீழாக கொட்டுகிறார்.. பணத்தில் மூச்சு முட்டும் ராசிகள்.. உங்கள் ராசியில் இருக்கா?
சுக்கிரன் தலை கீழாக கொட்டுகிறார்.. பணத்தில் மூச்சு முட்டும் ராசிகள்.. உங்கள் ராசியில் இருக்கா?

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரனின் ராசி மற்றும் அல்லது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடிய சுக்கிர பகவான் மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்தார். ஜூன் 30-ம் தேதி அன்று மிதுன ராசியில் உதயமானார். சுக்கிரனின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் உதயம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நல்ல மதிப்பெண்கள் பெற்று முன்னேற்றம் அடைவார்கள். வெளிநாட்டுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் மாணவர்களுக்கு கிடைக்க உள்ளது.

கன்னி ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியம் அனைத்தும் வெற்றி அடையும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். பழைய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உதயமாகியுள்ளார். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

பேச்சுத் திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணை என் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9