தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Guru Mars: பணத்தைக் கொட்டி தீர்க்கும் குரு செவ்வாய்.. அரச வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்.. யோகத்தில் மூழ்குவது யார்?

Lord Guru Mars: பணத்தைக் கொட்டி தீர்க்கும் குரு செவ்வாய்.. அரச வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்.. யோகத்தில் மூழ்குவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 04, 2024 04:50 PM IST

Guru Mars: குரு மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் ரிஷப ராசியில் இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பரப்புகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பணத்தைக் கொட்டி தீர்க்கும் குரு செவ்வாய்.. அரச வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்.. யோகத்தில் மூழ்குவது யார்?
பணத்தைக் கொட்டி தீர்க்கும் குரு செவ்வாய்.. அரச வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்.. யோகத்தில் மூழ்குவது யார்?

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவர்களுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவான் வருகின்ற ஜூலை 12-ம் தேதி அன்று ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதன் காரணமாக குரு மற்றும் செவ்வாய் இவர்கள் இருவரும் ரிஷப ராசியில் இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பரப்புகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். 

தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிறைய பணம் சேமிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் நிகழவு உள்ளது. இதனால் வருமானத்தின் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்களை வந்து சேரும்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழவு உள்ளது. இதனால் வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வணிகத்தில் நல்ல ஒப்பந்தங்கள் உருவாகும். 

பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். விரும்பிய இடம் மாற்றும் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். விளையாட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9