Lucky: சனியோடு சண்டைக்கு தயாராகும் ராகு.. கும்பத்தில் பொன்னான வாய்ப்புகளை பெறும் ராசிகள்.. வாழ்க்கை வருது-here we will see about the zodiac signs that will get progress in life if lord rahu kumbha rasi transits - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lucky: சனியோடு சண்டைக்கு தயாராகும் ராகு.. கும்பத்தில் பொன்னான வாய்ப்புகளை பெறும் ராசிகள்.. வாழ்க்கை வருது

Lucky: சனியோடு சண்டைக்கு தயாராகும் ராகு.. கும்பத்தில் பொன்னான வாய்ப்புகளை பெறும் ராசிகள்.. வாழ்க்கை வருது

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 09, 2024 01:04 PM IST

Lord Rahu: அதன் பின்னர் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24 வரை இதே கும்ப ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சனியோடு சண்டைக்கு தயாராகும் ராகு.. கும்பத்தில் பொன்னான வாய்ப்புகளை பெறும் ராசிகள்.. வாழ்க்கை வருது
சனியோடு சண்டைக்கு தயாராகும் ராகு.. கும்பத்தில் பொன்னான வாய்ப்புகளை பெறும் ராசிகள்.. வாழ்க்கை வருது

இந்நிலையில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கும்ப ராசியில் ராகு பகவான் நுழைகிறார். இது சனி பகவானின் சொந்தமான ராசி ஆகும். அதன் பின்னர் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24 வரை இதே கும்ப ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

ராகு பகவானின் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

அனைத்து விதமான தடைகளும் உங்களை விட்டு விலகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். அரசாங்க உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகர ராசி

ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திடீரென உங்களுக்காக அதிர்ஷ்டம் தேடி வரும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

நீண்ட காலம் நிதி சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். வாழ்க்கையில் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள் நீங்கி முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். இவரும் 2025 வரை அனைத்து வழிகளிலும் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கக்கூடும். வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக கூறவும்.

கும்ப ராசி

ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உங்கள் ராசியின் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகின்றார். உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் வாழ்க்கையில் கிடைத்த போகின்றது. குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சண்டை மற்றும் சச்சரவுகள் விலகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பார்த்ததை விட தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும். சிந்தித்து செயல்படுவது நல்லது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

தொடர்புடையை செய்திகள்