Sukra Double Luck: இரண்டு முறை வேட்டை.. சுக்கிரன் சூறையாட்டம்.. பணத்தில் விழுந்த ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Double Luck: இரண்டு முறை வேட்டை.. சுக்கிரன் சூறையாட்டம்.. பணத்தில் விழுந்த ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை யாருக்கு?

Sukra Double Luck: இரண்டு முறை வேட்டை.. சுக்கிரன் சூறையாட்டம்.. பணத்தில் விழுந்த ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Jul 27, 2024 12:19 PM IST

Sukra Double Luck: சுக்கிரன் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும் இந்த மாதம் சுக்கிரன் 2 முறை தனது இடத்தை மாற்றியுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

இரண்டு முறை வேட்டை.. சுக்கிரன் சூறையாட்டம்.. பணத்தில் விழுந்த ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை யாருக்கு?
இரண்டு முறை வேட்டை.. சுக்கிரன் சூறையாட்டம்.. பணத்தில் விழுந்த ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுக்கிரன் இரண்டு முறை தனது ராசியை மாற்றுகிறார். அது வெவ்வேறு வழிகளில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசிகள் நுழைந்தார்.

அதன் பின்னர் சுக்கிரன் ஜூலை 11ஆம் தேதி அன்று அதே ராசியில் உதயமானார். சுக்கிரன் வருகின்ற ஜூலை 31ஆம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும் இந்த மாதம் சுக்கிரன் 2 முறை தனது இடத்தை மாற்றியுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

தற்போது உங்கள் ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிரன் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் லக்கின வீட்டில் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிறைய பணம் உங்களைத் தேடி வரும். 

அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே உங்களுக்கு அன்பு அதிகரிக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சாரம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணை உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

புதிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். ஒட்டுமொத்த நிதி நிலைமையில் உங்களுக்கு மேன்மை இருக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்க கூடும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். பணவரவில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

துலாம் ராசி

உங்கள் ராசியில் வருமான வீடான பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையான லாபங்களும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் வணிகத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் தேடி வர போகின்றது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9