தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Zodiac Signs That Will Get Drenched In The Rain Of Money Created By The Sun

Sun Transit: சூரியனால் உருவான பணமழை..3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 29, 2024 04:50 PM IST

சூரியனால் உருவான பணமழையில் நனையப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

Sun transit
Sun transit

ட்ரெண்டிங் செய்திகள்

அதன் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். சமீபத்தில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனியோடு சூரிய பகவான் இணைகின்றார்.

அது மட்டும் அல்லாமல் சூரிய பகவான் நுழைந்த பிறகு இரண்டு பக்கங்களும் ராகு மற்றும் செவ்வாய் 2 கிரகங்கள் அமைந்துள்ளன இதனால் உபயாச்சாரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது. 500 ஆண்டுகளுக்கு பிறகு இந்த யோகம் உருவாகியுள்ளதால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசி பலன் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

சூரிய பகவானின் ராஜயோகத்தால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டிலிருந்து பண ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

 

சூரியனின் ராஜயோகத்தால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வணிக ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக அமையும்.

கும்பராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுத்துள்ளார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வணிக ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உங்களுடைய பேச்சால் காரிய தடைகள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel