தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அதிர்ஷ்டத்தில் அலச போகும் சூரியன்.. பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. இந்த ராசிகளுக்கு வருகிறது ராஜயோகம்

அதிர்ஷ்டத்தில் அலச போகும் சூரியன்.. பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. இந்த ராசிகளுக்கு வருகிறது ராஜயோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 04, 2024 04:45 PM IST

Lord Surya: சூரிய பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

அதிர்ஷ்டத்தில் அலச போகும் சூரியன்.. பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. இந்த ராசிகளுக்கு வருகிறது ராஜயோகம்
அதிர்ஷ்டத்தில் அலச போகும் சூரியன்.. பணத்தில் மூழ்கப் போகும் ராசிகள்.. இந்த ராசிகளுக்கு வருகிறது ராஜயோகம்

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சூரிய பகவான் கடந்த ஜூன் 15ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார் இது புதன் பகவானின் சொந்தமான ராசி ஆகும். புதன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

சூரிய பகவானின் மிதுன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

சூரிய பகவானின் இடமாற்றம் எங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தர போகின்றது. அவர் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதையா அதிகரிக்கும். தொழில் ரீதியான சிறப்பான பலன்கள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எதிரிகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும் தொழில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழில் தொடர்பான முக்கிய முடிவுகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். விரும்பிய இடம் மாற்றம் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9