பகடையாக உருளும் ராசிகள்.. பணத்தோடு விளையாடும் சுக்கிரன்.. ராஜ விருந்து இவர்களுக்கு தான்.. யோகம் யாருக்கு!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பகடையாக உருளும் ராசிகள்.. பணத்தோடு விளையாடும் சுக்கிரன்.. ராஜ விருந்து இவர்களுக்கு தான்.. யோகம் யாருக்கு!

பகடையாக உருளும் ராசிகள்.. பணத்தோடு விளையாடும் சுக்கிரன்.. ராஜ விருந்து இவர்களுக்கு தான்.. யோகம் யாருக்கு!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 17, 2024 11:02 AM IST

Lord Venus: சுக்கிரனின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நற்பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

பகடையாக உருளும் ராசிகள்.. பணத்தோடு விளையாடும் சுக்கிரன்.. ராஜ விருந்து இவர்களுக்கு தான்.. யோகம் யாருக்கு!
பகடையாக உருளும் ராசிகள்.. பணத்தோடு விளையாடும் சுக்கிரன்.. ராஜ விருந்து இவர்களுக்கு தான்.. யோகம் யாருக்கு!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் சுக்கிரன் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சுக்கிரனின் தனுசு ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நற்பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தனுசு ராசி

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்களுக்கு அனைத்து விதமான காரியங்களிலும் நன்மைகள் கிடைக்கும். எடுத்துக்கொண்ட விஷயங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மேஷ ராசி

சுக்கிரனின் பெரிய அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வர போகின்றது. உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். புதிய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிக ராசி 

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். 

வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் முடிவாகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மகிழ்ச்சியான தருணங்கள் உங்களை தேடி வரும். அதிர்ஷ்ட பலன்கள் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner