தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Jackpot: ரிஷபத்தில் குதித்த செவ்வாய்.. பணத்தில் மூச்சு முட்ட போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான் வருகிறது!

Jackpot: ரிஷபத்தில் குதித்த செவ்வாய்.. பணத்தில் மூச்சு முட்ட போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான் வருகிறது!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 04, 2024 09:42 AM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரிஷபத்தில் குதித்த செவ்வாய்.. பணத்தில் மூச்சு முட்ட போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான் வருகிறது
ரிஷபத்தில் குதித்த செவ்வாய்.. பணத்தில் மூச்சு முட்ட போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான் வருகிறது

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார் இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.

செவ்வாய் பகவானின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

ரிஷப ராசி

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் முதல் வீட்டில் நடக்கின்றது. இதனால் உங்களுக்கு புத்திசாலித்தனம் அதிகரிக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும். 

குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். சொத்துக்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் முடியும். கூட்டு வணிகம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்றுத்தரும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் இடம் பெறுகிறார். இதனால் உங்களுக்கு வசதிகள் மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். ஒவ்வொரு வேளையிலும் உங்களுக்கு நல்ல ஆர்வம் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். 

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும் சிக்கித் கிடந்த பணம் உங்களை தேடி வரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இருந்து செவ்வாய் பகவான் இடம் மாறி உங்கள் ரிஷப ராசிக்கு செல்கிறார். ஆனால் செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் வசிக்க போகின்றார். எதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் மீது ஆதாயங்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் அனைத்து காரியங்களும் உங்களுக்கு வெற்றியடையும். 

நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். துணிச்சல் மற்றும் மன தைரியம் அதிகரிக்கப்படும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மற்றவர்களை ஈர்க்கக்கூடிய வித்தை உங்களுக்கு தெரியும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9