கடகத்தில் சூரிய சுக்கிர சேர்க்கை.. பத்து நாட்கள் பணம் மழை.. மூன்று ராசிகள் உச்சம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கடகத்தில் சூரிய சுக்கிர சேர்க்கை.. பத்து நாட்கள் பணம் மழை.. மூன்று ராசிகள் உச்சம்

கடகத்தில் சூரிய சுக்கிர சேர்க்கை.. பத்து நாட்கள் பணம் மழை.. மூன்று ராசிகள் உச்சம்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jul 23, 2024 03:29 PM IST

Sun Venus: சூரியன் மற்றும் சித்திரன் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்காக அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடகத்தில் சூரிய சுக்கிர சேர்க்கை.. பத்து நாட்கள் பணம் மழை.. மூன்று ராசிகள் உச்சம்
கடகத்தில் சூரிய சுக்கிர சேர்க்கை.. பத்து நாட்கள் பணம் மழை.. மூன்று ராசிகள் உச்சம்

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். கடந்த ஜூலை 16ஆம் தேதி அன்று சூரியன் கடக ராசியில் நுழைந்தார்.

இதற்கு முன்னதாக கடக ராசியில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். தற்போது சூரிய பகவான் அவருடைய இணைந்துள்ளார். சூரியன் மற்றும் சித்திரன் இருவரும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது. 

இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்காக அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல மாற்றங்கள் இருக்கும். 

மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கரை சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். ஒவ்வொரு வேளையிலும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய செயல் திறன்கள் அனைத்தும் அதிகரிக்கும். நீண்ட நாள் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். 

இந்த காலத்தில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சூரியனின் ஆசிர்வாதம் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்துக் கொடுக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மிதுன ராசி

சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு திடீர் நிதி ஆதாயம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சிக்கி கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9