Mars Daridra Yoga: விரட்டி விரட்டி புரட்டப் போகும் செவ்வாய்.. கஷ்டப்படும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mars Daridra Yoga: விரட்டி விரட்டி புரட்டப் போகும் செவ்வாய்.. கஷ்டப்படும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Mars Daridra Yoga: விரட்டி விரட்டி புரட்டப் போகும் செவ்வாய்.. கஷ்டப்படும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 12, 2024 02:33 PM IST

Mars Daridra Yoga:

விரட்டி விரட்டி புரட்டப் போகும் செவ்வாய்.. கஷ்டப்படும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
விரட்டி விரட்டி புரட்டப் போகும் செவ்வாய்.. கஷ்டப்படும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

இது போன்ற போட்டோக்கள்

செவ்வாய் பகவான் இதுவரை மீன ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இதனால் மகா தரித்திர யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதனால் சிக்கலை சந்திக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

தரித்திர யோகத்தால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எந்த வேலையை தொடங்கினாலும் முடிவதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

சக ஊழியர்களோடு வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். எதிரியாக உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதிக செலவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் அமையும் பண வரவு பெரிய அளவில் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

தரித்திர யோகமானது உங்களுக்கு பல்வேறு விதமான தீங்குகளை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. சிறிய வேலைகள் கூட முடிவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். கடின உழைப்பு கூட உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தராது. புதிய ஒப்பந்தங்கள் பெற முடியாமல் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படும். 

வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தை சிக்கலாக முடிவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் நீங்கள் எந்தவித முதலீடுகளையும் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த காலம் உங்களுக்கு மிகவும் போராட்ட காலமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கடக ராசி

உங்கள் ராசிகளில் தரித்திர யோகம் சிறப்பான வேலைகளை செய்யப் போகின்றது. பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் சந்திப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் உங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உறங்குனர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படும். 

உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு மனக்கசப்புகள் உண்டாகும். தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9