தலையெழுத்து மாறும்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பம்.. மாட்டிக்கொண்ட ராசிக்காரர்கள்.. நீங்க இருக்கீங்களா?
Venus: இப்போது மீன ராசியில் சுக்கிரன் நுழைகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு கஷ்டம் உண்டாகும். சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை சுக்கிரன் மாற்றுவார். அசுரர்களின் குருவாக சுக்கிரன் திகழ்ந்து வருகின்றார்.
இதுவரை சனி பகவானின் கும்ப ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் சொந்த ராசியான மீன ராசியில் நுழைந்தார். மீன ராசிக்கு செல்லும் சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.
அதில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். சில ராசிகளுக்கு சங்கடங்கள் உண்டாகும். இப்போது மீன ராசியில் சுக்கிரன் நுழைகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு கஷ்டம் உண்டாகும். சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். இதனால் உங்கள் வாழ்வில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நெருக்கமான ஒருவரால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசி
உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் உங்களுக்கு உடன் இருப்பவர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. காரணம் தெரியாமல் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படக்கூடும் வீண்பழி உங்கள் மீது விழும். அதனால் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலைக்கு செல்லும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன் வேலை பார்ப்பவர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பணம் இழப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
விருச்சிக ராசி
உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் நுழையுள்ளார். இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் தொடர்பான சிக்கல்களை நீங்கள் அதிகம் சந்திக்க நேரிடும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் மாத இறுதிவரை உங்களுக்கு பல்வேறு விதமான செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9